ரூ.5.5 கோடி முதலீடு பெற்ற சென்னை டீப்-டெக் ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்-அப் Unibose!
இந்த முதலீட்டு சுற்றில், O2 Angels IN44 Capital, மற்றும் பிற முதலீட்டாளர்களும் பங்கேற்றனர். இதற்கு முந்தைய கட்டமாக, StartupTN இல் இருந்து ரூ.2.5 கோடி துவக்க முதலீட்டை இந்நிறுவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட Unibose Technology Pvt. Ltd., ஒரு டீப்-டெக் ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமாகும். மிகவும் குறுகலான, தீ அபாயம் உள்ள, ஆபத்தான தொழிற்சாலை சூழல்களில் பயன்படுத்தப்படும் ரோபோக்களை உருவாக்க ₹5.5 கோடி முதலீட்டை பெற்றுள்ளது.
இந்த முதலீட்டு சுற்றில் O2 Angels IN44 Capital, Coimbatore Innovation and Business Incubator, மற்றும் சில ஏஞ்சல் முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்றனர். இதற்கு முந்தைய கட்டமாக, Unibose நிறுவனம், StartupTN-இல் இருந்து ₹2.5 கோடி துவக்க முதலீட்டை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் மணிகண்டன் தட்சிணாமூர்த்தி, சமயராஜ் துரைராஜ், சக்திவேல் பண்ணீர் செல்வம், மற்றும் வெங்கடேஷ் சுந்தரமூர்த்தி ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது. இவர்கள் பொறியியல் தாண்டி, பல ஆண்டுகாலம் இராசயன நிறுவனங்களில் அனுபவமும், தொழில்முனையும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர்கள் ஆவார்கள்.

நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மணிகண்டன் தட்சிணாமூர்த்தி கூறும்போது,
“இந்த புதிய முதலீட்டை கொண்டு, யூனிபோஸ் இந்தியா, ஜிசிசி (GCC) மற்றும் தென் கிழக்காசியாவில் வணிக வளர்ச்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், ரோபோடிக் பம்ப்கள், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையிலான ஆய்வு மாட்யூல்கள் மற்றும் நேரடி விதிமுறை பின்பற்றும் கருவிகள் மீதான ஆராய்ச்சியும் வளர்ச்சி செயலிகளும் மேம்படுத்தப்படும். எங்கள் என்ஜினியரிங் மற்றும் சேவை குழுவையும் விரிவுபடுத்தி, OEM கூட்டமைப்புகளை உருவாக்கி, உலகளாவிய விற்பனை வாய்ப்புகளை உருவாக்கவுள்ளோம்,” என்றார்.
O2 Angels-இன் இணைநிறுவனர், ராஜேஷ் ரஞ்சன் கூறுகையில்,
“யூனிபோஸ்; தனது ஆழ் தொழில்நுட்பத் திறமையாலும், ரோபோடிக்ஸ் தளத்தின் பரவலான பயன்பாடுகளாலும் எங்களை ஈர்த்தது. இந்திய இன்ஜினியரிங் உலகளவில் எதையும் சாதிக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபிக்கின்றனர்.” என்றார்.
IN44 Capital நிறுவனத்தின் பங்குதாரர் சதீஷ் கணேசன் கூறும் போது,
“உயர் ஆபத்துள்ள தொழில் துறைகளுக்காக யூனிபோஸ் உருவாக்கியுள்ள இந்த ரோபோடிக் தொழில்நுட்பம் அத்தியாவசியமானது. தரச்சான்று பெற்றுள்ள இந்த ரோபோக்கள், சந்தைக்கு ஆயத்தமாக உள்ளன, இதை உலக அளவில் விரிவுபடுத்துவதில் எங்கள் ஆதரவை அளிக்க உற்சாகமாக உள்ளோம்,” என்றார்.
