வணிகங்கள் வாடிக்கையாளர்களுடன் வலுவானப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளத் தீர்வு வழங்கும் Meta
மெட்டா தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய மூன்று முக்கிய தளங்களை கொண்டு வர்த்தகங்களுக்கும் வாடிக்கையாளர்களும் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவர்ந்து வைத்திருக்க வேண்டிய சவாலுக்கு நிறுவனங்களுக்கு புதிய தீர்வுகளை மெட்டா வழங்கி வருகிறது.
TechSparks 2025 நிகழ்வில் ‘பியாண்ட் தி கிளிக்: பில்டிங் கான்வர்சேஷன்ஸ் தட் கன்வெர்ட்’ என்ற தலைப்பில் மாஸ்டர் கிளாஸ் வழங்கிய மெட்டா இந்தியா – பிஸினஸ் மெசேஜிங், பார்ட்னர்ஷிப்ஸ், தலைமை ரோஹந்த் ஷ்யாம் ராம்மோகன், தயாரிப்பு கண்டுபிடிப்பிலிருந்து வாங்குதல் வரை பயணத்தை முற்றிலும் உராய்வில்லாமல் ஆக்குவது தான் மெட்டாவின் நோக்கம், என்றார்.
வணிகங்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் மெட்டாவின் மூன்று தளங்கள்:
மெட்டா தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய மூன்று முக்கிய தளங்களை கொண்டு வர்த்தகங்களுக்கும் வாடிக்கையாளர்களும் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. 800–900 மில்லியன் இணைய பயனாளர்கள் உள்ள இந்திய சந்தையில் அடுத்த தலைமுறை நுகர்வோர் எப்படி தங்களுக்கான நுகர்பொருட்களைக் கண்டுபிடித்து வாங்கப் போகிறார்கள் என்பதற்கு இந்த தளங்கள் பெரிய அளவில் உதவுகின்றன.
இணையத்தில் வீடியோ பயன்பாடு அதிகரித்துள்ளதால், பயனர்களின் பயணம் வீடியோவிலிருந்து லைவ் ஷாப்பிங், கிரியேட்டர்கள், ஷார்ட்-வீடியோக்கள் வழியாக உரையாடல் வர்த்தகம் (conversational commerce) நோக்கி நகர்ந்து வருவதாக ராம்மோகன் குறிப்பிட்டார்.
நண்பர்கள், குடும்பத்தாருடன் பேசுவது போலவே வணிகங்களுடனும் பேச விரும்பும் பயனாளர்கள், படங்கள், வீடியோக்கள், லொகேஷன் பகிர்வு ஆகியவை கொண்ட WhatsApp போன்ற தளங்களில் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். இதனால் drop-offs குறைந்து உரையாடல்கள் அதிகரித்துள்ளன.
2019ல் WhatsApp for Business அறிமுகமானதிலிருந்து, இந்தியாவில் 600 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வணிகங்களுடன் WhatsApp வழியாக தொடர்பு கொள்கிறார்கள். உலகளவில் மிக அதிக அளவில் Meta AI பயன்படுத்தப்படும் சந்தையாகவும் இந்தியா திகழ்கிறது.
WhatsApp Flows முதல் நேட்டிவ் பேமென்ட்ஸ் வரை—வணிகங்களுக்கான புதிய கருவிகளை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. அவை WhatsApp Flows, In-app Web Views, Native Payments. இவை அனைத்தும் வாடிக்கையாளர் தர மதிப்பீடு (lead qualification), தரச்சேர்க்கை (data collection), தயாரிப்பு நுகர்பொருள்களைத் தேடி அடைதல் (product exploration மற்றும் checkout போன்ற செயல்களை நேரடியாக WhatsApp-இல் முடிக்க உதவுகின்றன, என விளக்கினார்.
மேலும், Conversions API-யை பயன்படுத்தி வாங்குதல் மற்றும் lead-quality தகவல்களை மெட்டாவுக்கு திரும்ப அனுப்பும்படி நிறுவனங்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. WhatsApp, Instagram மெசேஜிங் விளம்பரங்களுக்கு lead & purchase optimisation வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
பெரும் மாற்றமாக, WhatsApp Updates tab-இல் விளம்பரங்களை மேட்டா வெளியிட தொடங்கியுள்ளது. Facebook அல்லது Instagram-இல் அதிகமாக செயல்படாத, ஆனால் WhatsApp-இல் அதிக நேரம் செலவிடும் பயனாளர்களை பிராண்டுகள் இப்போது எளிதில் அடைய முடிகிறது.
வீடியோ பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், டிஜிட்டல் ஷாப்பிங் பழக்கவழக்கங்கள் உறுதியடைந்து வருவதால், இந்தியாவின் அடுத்த கட்ட ஆன்லைன் வணிக வளர்ச்சியில் messaging தான் மையத்தில் இருக்கும், என்கிறார் ராம்மோகன்.
தமிழில்: முத்துகுமார்
