சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய புதிய AI கருவிகளை உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ், சிஎம்சி வேலூர் ஆராய்ச்சியாளர்கள்!
இந்த ஏஐ நுட்பம், சிறுநீரக கோளாறு தொடர்பான முக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுகின்றன. சிறுநீரக நோய்கள் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் இல்லாதவையாக அமைகின்றன. இந்நிலையில், நோய் கண்டறிதலில் இந்த ஏஐ கருவுகள் உதவுகின்றன. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த உதவுவதோடு, டயலாசிஸ் தேவையையும் குறைக்கிறது.
ஐஐடி மெட்ராஸ் மற்றும் வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (CMC), ஆய்வாளர்கள், சிறுநீரக நோய்களை முன் கூட்டியே கண்டறிய உதவும் ஏஐ சார்ந்த கருவிகளை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து செயல்பட்டு, மூன்று தொழில்நுட்பங்களை இந்த குழு உருவாக்கியுள்ளது.
- முதல் நுட்பம், மருத்துவ மற்றும் ஆய்வுக்கூட தகவல்கள் கொண்டு தீவிர சிறுநீரக நோய்க்கான இடரை கண்டறிய வழிகாட்டும் இயந்திர மாதிரியாக அமைகிறது.
- இரண்டாவது நுட்பம் ஆழ் கற்றல் அடிப்படையில் சிடி ஸ்கானை ஆய்வு செய்து, வழக்கமான சிறுநீரகம், சிறுநீரக கட்டு, கல் மற்றும் டியூமர், என கண்டறிய வழி செய்கிறது.
- மூன்றாவது நுட்பம், கட்டியின் அளவு மற்றும் சிறுநீரக பாதிப்பை துல்லியமாக அலச உதவும் வகையில் சிடி ஸ்கேனில் இருந்து சிறுநீரகத்தை மறு உருவாக்கம் செய்கிறது.

ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்கள் ஜெனிபர் டெலிஹாடா, ஜி.எல்.சாமுவேல், மற்றும் சி.எம்.சி சிறுநீரகவியல் துறை பேராசிரியர் சந்தோஷ் வர்கீஸ்
இந்த நுட்பங்கள் சிறுநீரக கோளாறு தொடர்பான முக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுகின்றன. சிறுநீரக நோய்கள் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் இல்லாதவையாக அமைகின்றன. இந்நிலையில், நோய் கண்டறிதலில் இந்த ஏஐ கருவுகள் உதவுகின்றன. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த உதவுவதோடு, டயலாசிஸ் தேவையையும் குறைக்கிறது.
ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்கள் ஜி.எல்.சாமுவேல், ஜெனிபர் டெலிஹாடா மற்றும் சி.எம்.சி சிறுநீரகவியல் துறை பேராசிரியர் சந்தோஷ் வர்கீஸ் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
“மருத்துவர்கள் தகவல் அடிப்படையிலான முடிவுகளை விரைவாக மேற்கொள்ள உதவும் அறிவார்ந்த அமைப்புகளை உருவாக்க விரும்பினோம். இயந்திர கற்றலை மருத்துவ தகவல்களுடன் இணைந்து இதை உருவாக்கியுள்ளோம்,” என்று ஐஐடி பேராசிரியர் ஜி.எல்.சாமுவேல் கூறியுள்ளார்.
பேராசிரியர் ஜெனிபர் டெலிகட்டா இதுபற்றி பகிர்கையில்,
“சிறுநீரக நோய்களை கையாளதில் ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் முக்கியம். இடர் உள்ள நோயாளிகளில் இதை முன் கூட்டியே கண்டறிய ஏஐ கருவிகள் உதவும்,” என்று கூறியுள்ளார்.
ஏஐ சார்ந்த இமேஜ் ஆய்வு மற்றும் 3டி அனிமேஷன் மாதிரி இணைந்த சிறுநீரக டிஜிட்டல் இரட்டை அமைப்பை உருவாக்குவதில் இந்த ஆய்வு முக்கிய முன்னேற்றமாக அமைகிறது. இந்த ஆய்வு, ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஸ்பார்க் திட்ட ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.
Edited by Induja Raghunathan

