‘GCC-க்கள் அமைப்பதில் வியூக நோக்கில் தலைமைக்கு முன்னேற விரும்புகிறது இந்தியா’ - நிர்மலா சீதாராமன்
இந்திய தொழிலக கூட்டமைப்பின் சிஐஐ - ஜிசிசி வர்த்தக மாநாடு 2026ல் பேசிய நிர்மலா சீதாராமன், 2024ல் இந்தியாவில் வாரம் ஒரு ஜிசிசி அமைக்கப்பட்ட நிலையில் இருந்து தற்போது தினமும் ஒரு ஜிசிசி அமைக்கப்பட்டும் நிலை உண்டாகி, உலகின் பாதி GCC-கள் இந்தியாவில் இருக்கும் நிலை வந்துள்ளது, என்று கூறினார்.
பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) அமைக்க வழி செய்வதில் முன்னிலை வகித்து, உலக அறிவுசார் பொருளாதாரத்தின் தவிக்க முடியாத சக்தியாக உருவாக இந்தியா விரும்புகிறது, என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பின் சிஐஐ ஜிசிசி வர்த்தக மாநாடு 2026ல் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024ல் இந்தியாவில் வாரம் ஒரு ஜிசிசி அமைக்கப்பட்ட நிலையில் இருந்து தற்போது தினமும் ஒரு ஜிசிசி அமைக்கப்பட்டும் நிலை உண்டாகி, உலகின் பாதி ஜிசிசிகள் இந்தியாவில் இருக்கும் நிலை வந்துள்ளது என்று கூறினார்.

பெரிய அளவில் வளர்ச்சி பெறுவது மட்டுமே இனியும் இந்திய ஜிசிசி சூழலின் வெற்றிக்கான ஒரே அளவுகோள் அல்ல என்று கூறியவர் உலக நிறுவனங்கள் அடுத்த தலைமுறை சேவைகள் உருவாக்க, அதிநவீன நுட்பங்களை உருவாக்க மற்றும் வர்த்தக உத்திகளை வடிவமைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துப்படுகிறது என்று கூறினார்.
இந்த மாற்றத்தை வழிநடத்த தேவையான ஒவ்வொரு அம்சமும் இந்தியாவிடம் இருக்கிறது என்றார்.
"உலகின் திறன் மையமாக விளங்குவது மட்டும் எங்கள் விருப்பம் அல்ல, அடுத்த தலைமுறை சேவைகள், நுட்பங்கள், எதிர்கால நிறுவனங்கள் வடிவமைப்பது எங்கள் நோக்கம். இதன் மூலம் இந்தியா திறனில் இருந்து முன்னிலைக்கு முன்னேறுகிறது,” என்றார்.
"இந்தியாவின் ஜிசிசி பயணம் ஒரு வெற்றிகரமான துறையின் கதை மட்டும் அல்ல. இந்தியாவை உலக அறிவுசார் பொருளாதாரத்திற்கு இன்றிமையாததாக மாற்றுவது மற்றும் நம் நீண்ட கால பொருளாதார உறுதியை வலுவாக்குவது ஆகும். இதை செய்வதன் மூலம், நாம் புதிய வகை பொருளாதார உறுதி மற்றும் வியூக நோக்கிலான பொருத்தத்தை பெறுகிறோம்,” என்றார்.
இந்தியா 2,1000 க்கும் மேல் ஜிசிசி- கள் கொண்டுள்ளன. இவற்றில் 23 லட்சம் பேர் நேரடியாக பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது.
"கொள்திறனில் இருந்து உலகளாவிய தன்மையை அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியா நோக்குகிறது. உலக பொருளாதாரத்தில் நம்முடைய இடத்தை மாற்றி அமைக்கும் வாய்ப்பு இந்தியா முன் உள்ளது.”
ஃபார்த்யூன் உலக நிறுவனங்களில் மூன்றில் இரண்டு பங்கு இன்னமும் இந்தியாவில் இந்த மையங்கள் அமைக்காமல் இருப்பது நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய முதலீட்டு வாய்ப்பாகும்.
"இந்திய ஜிசிசி-கள் உலக தலைமை பண்பு தீர்ப்புகளில் அதிக பங்கை பெற்று வருகின்றன, வியூக நோக்கில் முடிவெடுக்கும் பொறுப்புகளிலும் இது நிகழ்கிறது. இந்தியாவின் மதிப்பு அம்சம், கொள்திறனில் இருந்து கொள்திறன் தலைமைக்கு மாறியுள்ளது,” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
நிறுவனங்கள் இப்போது செலவை குறைப்பதில் இருந்து புதுமையாக்கத்தை அதிகமாக்க விரும்புகின்றன. கண்டறிதலை வேகமாக்கி, நீண்ட கால போட்டித்தன்மையை வலுவாக்க முற்படுகின்றன என்றும் கூறினார்.
"இதுவே அடுத்த பத்தாண்டுகளுக்கான நம் இலட்சியத்தை வரையறுக்க வேண்டும், என நம்புகிறேன். மேலும், அதிக ஜிசிசி-களை அமைப்பது மட்டும் அல்ல, உலகின் ஐடியாக்கள், காப்புரிமைகள், சேவைகள், அல்கோரிதம்கள், மேடைகள் வர்த்தக திறன்கள் உருவாக்கம், பொறியியல் தன்மையில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க வேண்டும்,” என்றார்.
இந்தியாவின் அடுத்த கட்ட ஜிசிசி வளர்ச்சி உராய்வுகளை குறைக்கும் கொள்கை சூழலை எதிர்நோக்குகிறது என்பதை அரசு உணர்ந்துள்ளது. நிச்சயமான தன்மையை ஊக்குவித்து நீண்ட கால முதலீடுகளை ஆதரிக்க வேண்டும். இதற்கான பல நடவடிக்கைகள் 2026- பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள,ன என்றார்.
அடுத்த கட்ட ஜிசிசி முதலீடுகளுக்கு இரண்டாம் மற்றும், மூன்றாம் அடுக்கு நகரங்களை தயாராக்க தொழில்துறை, அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும், என அழைப்பு விடுத்தார்.
மதிப்பு சங்கிலியில் நிறுவனங்கள் தொடர்ந்து முன்னேறி, அறிவுசார் சொத்துரிமை உருவாக்கி, ஆய்வில் முன்னிலை வகித்து, ஏஐ செயலிகளை உருவாக்கி, உலக புதுமையாக்கத்தை வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், இந்தியாவின் அறிவுசார் அமைப்புகளுடன் தொடர்புகளை வலுவாக்கி, புதுமையாக்கம் ஆய்வகத்தில் இருந்து சந்தைக்கு செல்வதை சீராக்க வேண்டும், என்றும் கூறினார்.
செய்தி -பிடிஐ
Edited by Induja Raghunathan

