ஜாக்பாட்: அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் ரூ.27 கோடி வென்ற இந்தியர்!
பிரபல ’ஏப்ரல் ஃபூல்ஸ் டே’ லாட்டரியை வாங்கிய இந்தியர் மற்றும் அவரின் 12 நண்பர்களை கோடீஸ்வரராக்கிய ஒரு இலவச லாட்டரி டிக்கெட்!
அடிச்சது பாரு லாட்டரி டிக்கெட்டில் ஜாக்பாட்... அபுதாபி டியூட்டி பிரீ பிக் டிக்கெட் லாட்டரிக்கு கடந்த 3ம் தேதி நடந்த குலுக்கலில் 27.6 கோடி ரூபாயை வென்றுள்ளார் இந்தியர் ஒருவர். இந்த லாட்டரி சீட்டின் முதல் பத்து பரிசுகளில், 9 பரிசுகளை இந்தியர்களும், ஒரு பரிசுனை பாகிஸ்தானியரும் வென்றுள்ளனர்.
ஷார்ஜாவில் வசிக்கும் இந்தியரான ஷோஜித், அவரது நண்பருடன் இணைந்து அவருடைய பெயரில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஆன்லைனில் இரண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். 2 வாங்கினால் 1 இலவசம் என்பதால் 3 லாட்டரி நம்பர்களுடன் கட்டு கட்டு நோட்டுக்கள் பரிசு விழும் என காத்துகிடந்துள்ளார்.
அவருடைய காத்திருப்பும் நிறைவு பெற்று கடந்த 3ம் தேதி லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் நடைபெற்றது. பல ஆயிரம் எண்களை குலுக்கியதில், ரூ.27 கோடி ரூபாயை ஜாக்பாட் அடிக்கச் செய்தது ஏப்ரல் ஃபூல் அன்று ஷோஜித் வாங்கிய லாட்டரிசீட்டு.
ஆம், 030510 என்ற அவர் வாங்கிய லாட்டரிச் சீட்டு எண் தான் கோடிகளை வென்றது. இந்த ஹாப்பி நியூஸ் இந்தியாவையே எட்டிவிட்டது. பக்சே, கோடீஸ்வரராகிய செய்தி ஷோஜித்தை சென்றடையவில்லை.
யெஸ், யூடியுப்பில் லைவ்வாக ஒளிப்பரப்பப்பட்ட லாட்டரி டிக்கெட் குலுக்கல் வீடியோவில் லாட்டரியும் கையுமாக, அதிவேக லப்பு டப்பு இதயத் துடிப்புடன் கூடியிருந்தவர்கள் மத்தியில், பரிசு வென்ற லாட்டரி எண்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப் பட்டன. இறுதியாய் 15மில்லியன் திர்ஹாமை வென்றவர் ஷோஜித் என்று அறிவித்து அம்மகிழ்ச்சிகர செய்தியை அவரிடம் பகிர லாட்டரி நிறுவனம் பலமுறை அவரது தொலைபேசி எண்ணுக்கு முயன்றும், அவர் அழைப்பினை ஏற்கவில்லை.
“நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம். அப்படியும் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை எனில், ஷார்ஜாவில் பணிபுரியும் அவருடைய அலுவலகத்துகே நேரடியாக செல்வோம்,” என்று அறிவித்தார் லாட்டரி சீட்டு நிர்வாகி.
இறுதியில், அப்படியே நடந்துள்ளது. ஷார்ஜாவில் உள்ள அவருடைய அலுவலகத்துக்கு நேற்று (8.05.2019) மாலை சென்று சர்ப்ரைஸ் செய்தது லாட்டரிக் குழு. ஆனால், சர்ப்ரைஸ் அடைந்தது லாட்டரி டீமே. ஏனெனில், லாட்டரியை வென்று கோடீஸ்வரர் ஆகியது ஷோஜித் மட்டுமல்ல, அவருடைய நண்பர்கள் 12 பேரும். ஷோஜித்துடன் பணியாற்றும் 12 வெளிநாட்டவர்கள் இணைந்தே இணையத்தில் லாட்டரிச் சீட்டை வாங்கியுள்ளனர். அதில் ஷோஜித் ஐதராபாத்தை சேர்ந்தவர். பரிசுத்தொகை 27 கோடியை நண்பர்கள் 12 பேரும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். அப்படிப் பார்த்தாலும் எல்லாருமே கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டனர்.
“இத்தாலியில் பணியில் இருந்ததால் போன் அழைப்பை ஏற்க முடியவில்லை. எங்க பாஸ் தான் விஷயத்தைக் கூறினார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு முன்பாக பல முறை லாட்டரி வாங்கியுள்ளேன். இம்முறை 2 டிக்கெட் வாங்கி 1 இலவசமாக கிடைத்தது. அந்த இலவச லாட்டரி சீட்டின் எண்ணுக்கே இப்போது பரிசு கிடைத்துள்ளது. பிழைப்பு தேடி இங்கு வந்த இடத்தில் கிடைத்த அதிர்ஷடத்தால், எங்களுடைய குடும்பங்களின் நிலை வளர்ச்சி பெறுவதுடன், மற்றவர்களுக்கும் உதவ திட்டுமிட்டுள்ளோம்,” என்றார் ஷோஜித்.
இது தவிர, இந்தப் பரிசுச் சீட்டு குலுக்கலில், இன்னொரு இந்தியரான மங்கேஷ் மைந்தே பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை பரிசாக வென்றிருக்கிறார்.
அபுதாபி டியூட்டி பிரீ பிக் டிக்கெட் என்றால்?
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரிச்சீட்டு குலுக்கல் சட்டப் பூர்வமானது. அந்நாட்டில் படு ஃபேமசான அதிகப்பட்டச பைசா மழை பொழிய வைக்கும் லாட்டரி சீட்டு தான் அபுதாபி டியூட்டி பிரீ பிக் டிக்கெட். ஒவ்வொரு மாதமும் 3ம் தேதி இந்த லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் நடைபெறுகிறது.
ஜாகுவார், கொர்வெட், ஃபோர்டு முஸ்டாங் மற்றும் மினி-கூப்பர் போன்ற காஸ்ட்லி டிரீம் கார்களை பரிசாகக் கொண்ட லாட்டரி சீட்டும் ஒவ்வொரு மாதமும் குலுக்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான லாட்டரி குலுக்கலில் பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டது.
15மில்லியன் திர்ஹாம் லாட்டரி சீட்டின் விலை 500திர்ஹார். அதாவது இந்திய மதிப்பில் 9,493ரூபாய். டிக்கெட்டைhttps://bigticket.ae/ என்ற இணையதளம் வழியாகவோ அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையம், அல் ஐன் டூட்டி ஃப்ரீ மற்றும் அபுதாபி சிட்டி டெர்மினல் ஆகிய பகுதிகளிலும் டிக்கெட்டை வாங்கலாம்.
தகவல் உதவி: www.khaleejtimes.com | பட உதவி: Big Ticket