Milky Mist நிறுவன பங்கு வெளியீட்டிற்கு அமோக ஆதரவு: ஐபிஓ-வில் 56 மடங்கு அதிக விண்ணப்பங்கள்!
மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு, 56 மடங்கு அதிக விண்ணப்பங்களை பெற்று அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 155 மடங்கு விண்ணப்பமும், சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 9 மடங்கு விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு 56 மடங்கு அதிக விண்ணப்பங்களை பெற்று அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 155 மடங்கு விண்ணப்பமும், சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 9 மடங்கு விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் ஆரம்ப பொது வெளியீடு (ஐபிஓ) 11ம் தேதி துவங்கி, 13ம் தேதி முடிவடைந்தது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஏல நாள் 10ம் தேதியாக அமைந்தது. ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.465.30 கோடி திரட்டியது.
முன்னதாக, முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 107 பங்குகளுக்கும், அதன் பின், 107ன் மடங்குகளிலும் விண்ணப்பிக்கல்லாம், என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பங்கு வெளியீட்டின் கீழ் ரூ.2 முக மதிப்பு கொண்ட பங்குகளின் உச்சபட்ட விலை ரூ.133 முதல் ரூ.140 என அமைந்தது.
இந்த விற்பனைக்கான சலுகை கீழ், சதீஷ் குமார், ரூ.750 மில்லியன் மதிப்பிலான பங்குகளையும், அவரது மனைவி அனிதா.எஸ். ரூ.500 மில்லியன் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 13ம் தேதி வெளியீடு நிறைவடைந்த நிலையில், மொத்தமாக 56.12 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 155.83 மடங்கு விண்ணப்பமும், நிறுவனங்கள் அல்லாத பிரிவில் 34.91 மடங்கு விண்ணப்பங்களும், சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 8.40 மடங்கு விண்ணப்பங்களும் பெறப்பட்டன. ஊழியர்கள் பிரிவில் 12.41 மடங்கு விண்னப்பிக்கப்பட்டன.
கிரே மார்க்கெட்டில் இதன் பிரிமியம், உச்ச வரம்பை விட 15 சதவீதம் கூடுதலாக இருந்ததாக தெரிகிறது.
ரூ.133-140 விலை வரம்பில், ரூ.1,553 கோடி மதிப்பிலான இந்த வெளியீடு, ரூ.1,428 கோடி அளவிலான புதிய பங்குகள் வெளியீடு மற்றும் ரூ.125 கோடிக்கான விற்பனை வாய்ப்பையும் பெற்றிருந்தது.
இந்திய பால் பண்ணை நிறுவனங்களில் இந்த வெளியீடு மிகப்பெரியதாக அமைகிறது. பராக் மில்க் புட்ஸ், ஹட்சன் அக்ரோ மற்றும் டோட்லா டெய்ரி உள்ளிட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பங்குகளின் விலை வரம்பு உச்சத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பீடு, ரூ. 10,778 கோடியாக அமைகிறது.
நிறுவன பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் 18 ம் தேதி பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Induja Raghunathan
