வலுவான ஃபேஷன் விற்பனையால் முதல் காலாண்டில் 30 சதவீத நிகர வருவாய் வளர்ச்சி எதிர்பார்க்கும் Nykaa
நிறுவன பிரதான மேடை வர்த்தக வளர்ச்சி, பிராண்டு செயல்பாடு மற்றும் அண்மை மார்க்கெட்டிங் முயற்சிகளால் கிடைத்த புதிய வாடிக்கையாளர்களால் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைகா பிராண்டின் உரிமையாளர் நிறுவனம் எப்.எஸ்.என் இ-காமர்ஸ் வென்சர்ஸ் தனது பேஷன் வர்த்தகத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காரணமாக, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒட்டுமொத்த நிகர வருவாயில் 30 சதவீத வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு அமைப்பிடம் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, 2026 ஜூன் வரையான காலாண்டில், ஒட்டுமொத்த பொருட்கள் விற்பனை மதிப்பு (ஜிஎம்வி) மற்றும் நிகர விற்பனை மதிப்பு (எஸ்.என்.வி) 30 சதவீத வளர்ச்சி காணும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.
"நைகாவின் பேஷன் வர்த்தகம், 2027 நிதியாண்டை குறிப்பிடத்தக்க நிலையில் துவங்கியுள்ளது. முந்தைய காலாண்டுகளில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, என்.எஸ்.வி வளர்ச்சி 50 களில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎம்வியில் இருந்து என்.எஸ்.விக்கு பேஷன் வர்த்தகம் மேம்பாட்டை கண்டு வருகிறது. கசிவுகள் குறைக்கப்பட்டுள்ளன,” என்று நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

நிறுவன பிரதான மேடை வர்த்தக வளர்ச்சி, பிராண்டு செயல்பாடு மற்றும் அண்மை மார்க்கெட்டிங் முயற்சிகளால் கிடைத்த புதிய வாடிக்கையாளர்களால் நிகழ்ந்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்னணி அழகு சாதன பிரிவு 20 சதவிதத்திற்கும் மேலான வளர்ச்சி காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாத கணக்கு படி, நிறுபனம் 324 விற்பனை மையங்கள் கொண்டுள்ளது. 2026 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.78.75 கோடி ஈட்டியது. அழகு சாதனை விற்பனை மற்றும் பேஷனில் நஷ்டம் குறைந்திருப்பது இதற்கு முக்கிய காரணம்.
இந்த காலாண்டில் செயல்பாடுகள் மூலமான வருவாய் ரூ.2,648.17 கோடியாக 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
2026 மார்ச் 31 முடிந்த ஆண்டில் நிறுவன லாபம் ரூ.203.94 கோடியாக இருந்தது, முந்தைய நிதியாண்டில் இது ரூ.72.07 கோடியாக இருந்தது. செயல்பாடுகள் மூலமான ஆண்டு வருவாய் ரூ.10,022.35 கோடியாக 26 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
நிறுவனம் தனது முதலீட்டாளர் தினத்தில் அதன் நீண்ட கால வளர்ச்சி திட்டங்களை அறிவித்த நிலையில் இந்த காலாண்டு முடிவுகள் வந்துள்ளன. 2030ல் நிறுவனம் 2-3 மடங்கு வருவாய் வளர்ச்சியையும், 4-5 EBITDA வளர்ச்சியையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது. விற்பனை நிலையங்களை 600 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதோடு, வாடிக்கையாளர் பரப்பையும் 100 மில்லியனாக உயர்த்த விரும்புகிறது.
இந்த செய்தியை முதலீட்டாளர்கள் நல்ல முறையில் வரவேற்றுள்ளனர். ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்பால், திங்கள் காலை வர்த்தகத்தில் நிறுவன பங்குகள் 3 சதவீதம் உயர்ந்தன.
பிடிஐ தகவல்களுடன் யுவர்ஸ்டோரி குழு
Edited by Induja Raghunathan

