25 ரூபாய் முதல் அலுவலக வாடகை: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பணியிட சேவை வழங்கும் ’Go Floaters'

By Mahmoodha Nowshin
September 20, 2018, Updated on : Mon Dec 16 2019 12:27:31 GMT+0000
25 ரூபாய் முதல் அலுவலக வாடகை: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பணியிட சேவை வழங்கும் ’Go Floaters'
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close
"

கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட்-அப் சுய தொழில் மோகம் இந்தியாவில் பரவலாக பரவிக்கொண்டு வருகிறது. வேலைத் தேடி அலுவலகம் ஏறி இறங்கிய காலம் மாறி சுய தொழில் செய்ய வாய்ப்புகளை வலைப்போட்டு பிடிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். 

ஸ்டார்ட்-அப்கள் அதிகரிப்பதையே தனக்கு சாதகமாய் பயன்படுத்தி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அலுவலகம் பெற கோ ஃப்லோடர்ஸ்(Gofloaters) என்னும் ஸ்டார்ட்-அப் உருவாக்கியுள்ளார் சென்னையை சேர்ந்த ஷாம் சுந்தர்.

\"image\"

image


கோஃப்லோடர்ஸ் பிரத்தியேகமாக ஸ்டார்ட்-அப்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர் நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொழில் தொடங்கும் சிறு தொழில் முனைவோர்கள் முன்பணம் செலுத்தி வாடகை கொடுத்து அலுவலகம் அமைக்காமல் பயன்பாடிற்கு ஏற்ற தொகையை செலுத்தி பயன்படுத்தலாம். ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு மட்டும் சந்திப்புகளை நடத்த WiFi மற்றும் மற்ற வசதிகளுடன் கஃபேவில் அமைத்துத் தருகிறது இந்நிறுவனம்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் ஷாம் சுந்தர் ஓர் பொறியியல் பட்டதாரி, ஐஐடியில் தன் படிப்பை முடித்துவிட்டு பெரும் நிறுவனத்தில் 4 வருடம் பணிப்புரிந்து மீண்டும் மேல் படிப்பை தொடர்ந்து ஐடி நிறுவனத்தில் சேர்ந்தார். 14 வருடம் அங்கு பணிபுரிந்து மேல் நிலையை எட்டியப்பின் கற்றவைகளை பயன்படுத்தும் வகையில் சுய தொழில் தொடங்க முடிவு செய்தார்.

“ஐ.டி.யில் இன்சுரன்ஸ் துரையின் தலைமை பொறுப்பில் இருந்தேன் அப்பொழுது சென்னையில் வர்தா புயல் மற்றும் வெள்ளம் வந்தப்போது பல சிறு தொழில்கள் சேதம் அடைந்தது. அவர்களுக்கு காப்பீடு பற்றிய விழிப்புணர்வு நோக்கில் என் முதல் தொழில் பயணம் துவங்கியது” என்கிறார் ஷாம்.

14 வருடமாக காப்பீடு சார்ந்த பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் ரீதியாக தீர்வு கண்ட அனுபவத்தால் தனக்கு நன்கு அறிந்ததை வைத்த தொழில் தொடங்கலாம் என இதை தேர்ந்தெடுத்ததாக குறிப்பிடுகிறார் ஷாம். மேலும் இந்தியாவில் பெரும் நிறுவனங்களுக்கு இருப்பது போல் சிறு நிறுவனங்களுக்கு காப்பீடு இருப்பதில்லை இருந்தாலும் அதைப்பற்றிய விழிப்புணர்வு பல தொழிலாளர்களுக்கு இல்லை. எனவே இதை தன் தொழிலாய் எடுத்துக்கொண்ட ஷாம், காப்பீடு பற்றி தெரிவிக்க முதலில் உணவகங்கள் மற்றும் கஃபேக்களை அணுகினார்.

\"GoFloaters

GoFloaters நிறுவனர் ஷாம்


தனது நிறுவனத்தை பற்றி பேச வாடிக்கையாளர்களை பெற பல ஸ்டார்ட்-அப்களை ஷாம் சந்தித்தார். தொழிலின் தொடக்கத்தில் அலுவலகம் இல்லாததால் பெரும்பாலும் கஃபேக்களில் தான் இவரது சந்திப்புகள் நடந்தது.

“கஃபேக்களில் சந்திப்புகளை நடத்துவதால் நிச்சயம் உணவுக்கு பணம் செலவழிக்க வேண்டும் மேலும் அதிகபட்சம் ஒரு மணி நேரமே சந்திப்புகளை நடத்த முடியும். இந்த சிக்கலுக்கு தீர்வை தேட தோன்றியதே கோ ஃப்லோடர்ஸ்,” என்கிறார்.

மேலும் வாரநாட்களில் பகலில் பல உணவகங்களில் வாடிக்கையாளர்கள் இல்லாமல் பெரும்பாலும் காலியாக இருப்பதையும் ஷாம் கவனித்தார். அலுவலக சந்திப்புகளிக்கு இடம் இல்லாமல் தேடுபவர்களையும் இடம் இருந்தும் பயன்பாடு இல்லாமல் இருக்கும் கஃபேக்களை இணைக்கும் நோக்கில் கோ ப்லோடர்ஸ் நிறுவனத்தை 2017ல் துவங்கினார். 

முதலில் சென்னையில் 5 கஃபே உரிமையாளர்களிடம் பேசி தனது நிறுவனத்துடன் இணைத்துக்கொண்டார். பின் அலுவலக பயன்பாட்டிற்கு இடம் தேடும் ஸ்டார்ட்-அப்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ. 25 என கஃபேவை பயன்படுத்த உதவினார். இதன் மூலம் உணவு வாங்கும் கட்டாயம் இல்லை.மேலும் இணையதளம் வசதி, சார்ஜிங் வசதி என மற்ற இணைப்புகளையும் பயன் படுத்திக்கொள்ளலாம். ஆரம்பத்தில் வாட்ஸாப்பில் துவங்கி இன்று தனி செயிலிக் கொண்டு செயல்படுகிறது இந்நிறுவனம்.

ஓலா, உபர் போல் உங்களுக்குத் தேவையான இடத்தை ஆப் மூலம் புக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 10 லட்சம் முதலீடு செய்து துவங்கிய இந்நிறுவனம் ஓராண்டை எட்டிய நிலையில் ஓரளவு லாபம் பார்ப்பதாக தெரிவிக்கிறார் ஷாம். மேலும் நிறுவனத்தை விரிவாக்க, ப்ரொஜக்டர் வசதியுடன் கான்ஃபரன்ஸ் ஹால் எதிர்பார்க்கும் ஸ்டார்ட்-அப்களுக்கு அதையும் குறைந்தக் கட்டணத்தில் அளிக்கின்றனர். மேலும் தினம் மற்றும் மாத கணக்கிலும் பகிரப்பட்ட அலுவலக இட சேவைகளையும் வழங்குகிறது இந்நிறுவனம்.

\"image\"

image


“எனது ஒரே நோக்கம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உதவுவது தான். 6 மாத வாடகையை முன் பணமாக செலுத்தி துவங்கும் அளவிற்கு ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி இருக்காது. அந்த தொகையை இடத்திற்கு செலுத்தாமல் தொழிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்...”

மேலும் 10 நபர்களுக்குள் இருக்கும் நிறுவனங்களுக்கு பெரிய இடம் தேவைப்படாது அவர்கள் இந்த பகிரப்பட்ட அலுவலக இட சேவையை பெற்று பயன்பாட்டிற்கான பணத்தை மட்டும் செலுத்தலாம் என்கிறார். ஸ்டார்ட்-அப்கள் வளர்ந்து வரும் நிலையில் எனது தொழிலுக்கான வளர்ச்சியை தன்னால் பார்க்க முடிகிறது என்கிறார். மேலும் ரியல் எஸ்டேட் போல் மாறாமல் சிறு தொழில் நிறுவனர்கள் அதிக பயனடையும் நோக்கிலே தனது நிறுவனம் செயல்படும் என முடிக்கிறார் ஷாம். 

செயிலி: கோ ஃப்லோடர்ஸ் GoFloaters

"