ஓலா எலக்ட்ரிக் 'Hyperservice' மையங்கள் தொடக்கம் - ஒரே நாளில் சர்வீஸ் கியாரண்டி!
இதன் உடன் நடவடிக்கையாக பெங்களூருவின் இந்திரா நகரில் முதல் ஹைப்பர்சர்வீஸ் மையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. வரும் வாரங்களில் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களிலும் உள்ள சேவை மையங்கள் 'ஹைப்பர்சர்வீஸ்' மையங்களாக தரம் உயர்த்தப்படும்
இந்தியாவின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், தனது வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் 'ஹைப்பர்சர்வீஸ்' (Hyperservice) எனும் புதிய சேவை மையங்களைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாளில் சர்வீஸ் (Same-day service) செய்து தரப்படும், என நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இதன் உடன் நடவடிக்கையாக பெங்களூருவின் இந்திரா நகரில் முதல் ஹைப்பர்சர்வீஸ் மையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. வரும் வாரங்களில் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களிலும் உள்ள சேவை மையங்கள் 'ஹைப்பர்சர்வீஸ்' மையங்களாக தரம் உயர்த்தப்படும். இந்த விரைவான சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.
ஒவ்வொரு மையத்திலும் வாடிக்கையாளர் ஓய்வறை, இலவச Wi-Fi வசதி மற்றும் வாகனத்தின் சர்வீஸ் நிலையை நேரலையில் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கும் வசதி ஆகியவை உள்ளன.
மெக்கானிக்குகளுக்கு திறந்த தளம் (Open Platform):
தனது சேவை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த, ஓலா நிறுவனம் தனது அசல் உதிரி பாகங்கள் (Genuine parts), பழுதுகளைக் கண்டறியும் கருவிகள் (Diagnostic tools) மற்றும் பயிற்சி தொகுப்புகளை மெக்கானிக்குகள் மற்றும் பட்டறைகளுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான வாகனப் பாகங்களை Ola Electric App மூலமாகவே நேரடியாக ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஒருபுறம் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், மறுபுறம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடும் போட்டியைச் சந்தித்து வருகிறது. ஏதர் எனர்ஜி (Ather Energy), டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) மற்றும் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) ஆகிய நிறுவனங்களின் வரவால் ஓலாவின் சந்தைப் பங்கு கணிசமாகக் குறைந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் ஓலா நிறுவனம் வெறும் 7,567 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஒட்டுமொத்த மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் ஓலாவின் பங்கு 7.2% ஆகக் குறைந்துள்ளது.
"வாடிக்கையாளர் சேவையை ஒரு தயாரிப்பைப் போலவே நவீனப்படுத்த வேண்டியது அவசியம். தொழில்நுட்பம் மற்றும் செயல்முறை மாற்றங்கள் மூலம் வெளிப்படையான மற்றும் விரைவான சேவையை வழங்கவே இந்த ஹைப்பர்சர்வீஸ் மையங்கள்," என்று ஓலா நிறுவன செய்தித் தொடர்பாளர் ஹைப்பர் சர்வீஸ் மையங்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.

