போனில் தொடர் ஸ்க்ரோலிங்கினால் ஏற்படும் மனநலச் சோர்வை சமாளிக்க மனநல ஆப் ‘OruCupOxygen’ அறிமுகம்!
‘No-Scroll Movement’ என்ற புதிய அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்ட இந்த செயலி, கவனம், தூக்கம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை எளிய தினசரி பழக்கமாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் முடிவில்லா ஸ்க்ரோலிங் மற்றும் குறையும் கவனத்திறன் போன்ற சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், 'OruCupOxygen' தனது புதிய மனநல செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. “No-Scroll Movement” என்ற புதிய அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்ட இந்த செயலி, கவனம், தூக்கம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை எளிய தினசரி பழக்கமாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
“நாங்கள் வெறும் ஒரு ஆப்’-ஐ உருவாக்கவில்லை; ஒரு பழக்கத்தை உருவாக்குகிறோம். இன்றைய உலகில் கவனம் மிகவும் எளிதில் கலைந்து போகிறது. அதை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவுவதே எங்கள் நோக்கம்,” என்று இணை நிறுவனர் சந்தோஷ் குமார் கூறினார்.
எண்ணற்ற தியானம் மற்றும் உடற்பயிற்சி, யோகா அல்லது உற்பத்தித்திறன் செயலிகளிலிருந்து விலகி, இந்த செயலி விளம்பரங்களும் அல்காரிதங்களும் இல்லாத சூழலை வழங்குகிறது. “Focus Pods” எனப்படும் குறுகிய, கட்டமைக்கப்பட்ட பயிற்சிகள் மூலம் பயனர்கள் தினசரி கவனத்திறனை மேம்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த பயிற்சிகள் ஒரே நாளில் ஒன்றாக மட்டுமே பயன்படுத்த முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், உடனடி திருப்தியை விட பழக்க வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மேலும், தூக்கத்திற்கான பிரிவில் அமைதியான குரல்கள் மற்றும் இயற்கை ஒலிகளுடன் கூடிய ஆடியோ அனுபவங்கள் வழங்கப்பட்டு, பயனர்கள் சீரான நித்திரைக்கு மாற உதவுகிறது.
“ஸ்க்ரோலிங் கலாச்சாரத்திலிருந்து விலகி, நிதானமாக நிற்கவும் சிந்திக்கவும் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தகவலை சும்மா உள்வாங்காமல், விழிப்புணர்வுடன் ஆராய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்று இணை நிறுவனர் சா கீ தெரிவித்தார்.
இந்த செயலி; 25,000க்கும் மேற்பட்ட பயனர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. 21 நாள் கவன சவால்கள், பயனர் சோதனைகள் மற்றும் பல ஆண்டுகளாக செய்யப்பட்ட மேம்பாடுகள் மூலம், வழிகாட்டும் அறிமுகங்கள், விளையாட்டுத்தன்மை கொண்ட கற்றல் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட ஆடியோ வடிவங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிமுகத்தை முன்னிட்டு, “Oru Cup Focus” என்ற தனித்துவமான அனுபவ நிகழ்ச்சி ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்றது. 45 முதல் 60 நிமிடங்கள் வரை நீடித்த இந்த அனுபவத்தில், பார்வை, ஒலி, தொடுதல், மணம் போன்ற ஐந்து உணர்வுகளின் மூலம் கவனத்தை ஆராயும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, கவனத்தை மேம்படுத்துவதற்கு முன் அதை புரிந்துகொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

வேகமான மற்றும் டிஜிட்டல் நிறைந்த வாழ்க்கையை நடத்தும் நபர்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட இந்த செயலி, மனநலத்தை உடற்பயிற்சியைப் போலவே ஒரு தினசரி பழக்கமாக மாற்ற முயல்கிறது. குறைந்த கட்டண சந்தா திட்டங்களுடன், மனநல பராமரிப்பை ஒரு பரிசாகவும் வழங்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
OruCupOxygen நிறுவனத்தை சந்தோஷ் குமார் மற்றும் சா கி ஆகியோர் நிறுவினர். டிஜிட்டல் சோர்வு மற்றும் குறையும் கவனத்திறன் போன்ற தனிப்பட்ட அனுபவங்களால் தூண்டப்பட்ட அவர்கள், மனிதர்கள் தங்கள் கவனத்தை மீட்டெடுத்து, நல்ல பழக்கங்களை உருவாக்கி, உலகுடன் விழிப்புணர்வுடன் தொடர்பு கொள்ள உதவும் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளனர்.
செயலியை டவுன்லோடு செய்ய :

