தனிநபர் அழகுப் பராமரிப்புப் பிரிவில் விரிவாக்கம்’ - ‘Ajio beauty’ தளத்தை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் ரீடெயில்!
ஃபேஷனை மையமாகக் கொண்ட அஜியோவின் டிஜிட்டல் அணுகலையும், நிறுவனத்தின் ஆம்னிசானல் அழகு சாதனப் பிரிவான Tira-வின் அழகு துறை நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைத்து, சருமப் பராமரிப்பு, மேக்கப், தலைமுடி பராமரிப்பு, வாசனைத் திரவியங்கள், குளியல் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களை அஜியோ பியூட்டி வழங்குகிறது.
வேகமாக வளர்ந்து வரும் அழகு மற்றும் தனிநபர் பராமரிப்புப் பிரிவில் தனது இருப்பை வலுப்படுத்தும் நோக்கில், ‘அஜியோ பியூட்டி’ (Ajio Beauty) என்ற புதிய தளத்தை ரிலையன்ஸ் ரீடெயில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
ரிலையன்ஸின் விரிவான ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் சூழலின் ஒரு பகுதியாக இந்த புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஃபேஷனை மையமாகக் கொண்ட அஜியோவின் டிஜிட்டல் அணுகலையும், நிறுவனத்தின் ஆம்னிசானல் அழகு சாதனப் பிரிவான Tira-வின் அழகு துறை நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைத்து, சருமப் பராமரிப்பு, மேக்கப், தலைமுடி பராமரிப்பு, வாசனைத் திரவியங்கள், குளியல் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள், என அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் தளமாக அஜியோ பியூட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் குறைந்த விலைப் பிரிவு முதல் பிரீமியம் மற்றும் ஆடம்பரப் பிரிவுகள் வரையிலான பொருட்கள் கிடைக்கும். இந்திய மற்றும் சர்வதேச அளவில் 1,500-க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் தயாரிப்புகள் இதில் இடம்பெறும் என்று ரிலையன்ஸ் ரீடெயில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 19,000-க்கும் மேற்பட்ட பின்கோடுகளுக்கு இந்த தளம் பொருட்களை விநியோகிக்கும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அழகு சாதனப் பொருட்களின் ஒரு பகுதி, நிறுவனத்தின் விரைவு வர்த்தக டெலிவரி சேவையான AJIO Rush மூலமாகவும் வழங்கப்படும்.
“அஜியோ பியூட்டி மூலம் ஃபேஷனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை அழகு சாதனத் துறைக்கும் விரிவுபடுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் தங்களது தனித்துவத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் பொருந்தும் தயாரிப்புகளைக் கண்டறியும் தளமாக இது அமையும்,” என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அழகு சாதனங்களை வெறுமனே வாங்கும் பரிவர்த்தனை அனுபவத்தைத் தாண்டி, புதிய ட்ரெண்ட்களைக் கண்டறிதல், தேர்ந்தெடுக்கப்பட்ட அழகு பராமரிப்பு முறைகள், பொருட்களின் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட பரிந்துரைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தனது லைஃப்ஸ்டைல் வர்த்தகப் பிரிவை தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில், ரிலையன்ஸ் ரீடெயிலின் இந்த புதிய அறிமுகம் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெயில் வெஞ்சர்ஸ் லிமிடெட் (RRVL)-ன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெயில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) குழுமத்தின் கீழ் செயல்படும் அனைத்து சில்லறை வர்த்தக நிறுவனங்களையும் நிர்வகிக்கிறது. இந்நிறுவனம் ஓம்னிசானல் முறையில் 20,169 கடைகளை இயக்கி வருகிறது.
2026 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், RRVL ரூ.3.70 லட்சம் கோடி மொத்த வருவாயைப் பதிவு செய்தது.
