Shadowfax IPO- ஒரு பங்கின் விலை ரூ.118 முதல் ரூ.124 வரை நிர்ணயம்!
இந்த ஆரம்பப் பொதுப்பங்கு வெளியீடு ஜனவரி 20 அன்று சந்தாவிற்கு திறக்கப்படுவதுடன், மொத்த வெளியீட்டு அளவு ரூ.1,907.2 கோடியாக இருக்கும்.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் Shadowfax நிறுவனம், தனது ஆரம்ப பொதுபங்கு வெளியீட்டில் (IPO) ஒரு பங்கு ரூ.118 முதல் ரூ.124 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, புதன்கிழமை வெளியிட்ட செய்தித்தாள் விளம்பரத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ஆரம்பப் பொதுப்பங்கு வெளியீடு ஜனவரி 20 அன்று சந்தாவிற்கு திறக்கப்படுவதுடன், மொத்த வெளியீட்டு அளவு ரூ.1,907.2 கோடியாக இருக்கும். இதில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியீடும், முதலீட்டாளர்கள் விற்பனை செய்யும் ரூ.907.3 கோடி மதிப்புள்ள பங்குகளைக் கொண்ட ‘விற்பனைக்கான வழங்கல்’ (offer-for-sale) பகுதியும் அடங்கும் என, செவ்வாய்க்கிழமை நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட பூர்வாங்க ஆவணத்தில் (red herring prospectus) குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த IPO-வில் Flipkart, Eight Roads Investments, Qualcomm, Nokia Growth Partners, NewQuest, International Finance Corporation மற்றும் Mirae Asset ஆகியவை பங்குகளை விற்பனை செய்யும் பங்குதாரர்களாக உள்ளன.
ஒரு நாள் மட்டுமே நடைபெறும் anchor bidding ஜனவரி 19 அன்று தொடங்கும் நிலையில், Shadowfax பங்குகள் ஜனவரி 28 அன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகர வெளியீட்டில் சுமார் 75% தகுதியான நிறுவன முதலீட்டாளர்களுக்காக (QIB) ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 15% நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும், 10% வரை சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படும். மேலும், ஊழியர்களுக்காக ரூ.5 கோடி மதிப்புள்ள பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் RHP தகவலின்படி,
Shadowfax; FY25-ல் ரூ.6.4 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் ரூ.11.8 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது. இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் வருடாந்திர அடிப்படையில் 32% உயர்ந்து ரூ.2,485 கோடியாக அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தை பட்டியலிடலிலிருந்து கிடைக்கும் நிகர வருவாயின் பெரும்பகுதியை தனது வலைப்பின்னல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக நிறுவனம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய first-mile, last-mile மற்றும் sorting centres-க்கான லீஸ் கட்டணங்களை செலுத்தவும், ஒரு பகுதியை பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் செலவுகளுக்காகவும் பயன்படுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
