Stock News: கச்சா எண்ணெய் விலை 109 டாலர் - சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு!
ஈரான் போர் பதற்றம் நீடித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 109 டாலரை எட்டுகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நீடிக்கிறது.
கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நீடித்து வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 628.24 புள்ளிகள் சரிந்து 74,257.69 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 221.20 புள்ளிகள் சரிந்து 23,255.10 ஆக இருந்தது. பின்னர் மீண்டும் தடுமாற்றம் காண ஆரம்பித்தது.
“ஈரான் போர் பதற்றம் நீடித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 109 டாலரை எட்டுகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நீடிக்கிறது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், ஐடிசி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஆக்சிஸ் பேங்க், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ், டைடன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 10.40 மணியளவில் சென்செக்ஸ் 529.80 புள்ளிகள் சரிந்து 74,372.79 ஆகவும், நிஃப்டி 183.90 புள்ளிகள் சரிந்து 23,293.90 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகப் போக்கு நிலவுகிறது. ஈரான் போர் பதற்றம் நீடித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 109 டாலரை எட்டுகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நீடிக்கிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டெக் மஹிந்திரா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இன்போசிஸ்
ஐடிசி
பாரதி ஏர்டெல்
அதானி போர்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஆக்சிஸ் பேங்க்
எஸ்பிஐ
பஜாஜ் ஃபைனான்ஸ்
டைடன் கம்பெனி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
என்டிபிசி
டாடா ஸ்டீல்
எல் அண்ட் டி
இண்டஸ்இண்ட் பேங்க்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பஜாஜ் ஃபின்சர்வ்
டிசிஎஸ்
எடர்னல்
இந்துஸ்தான் யூனிலீவர்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
சன் பார்மா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
மாருதி சுசுகி
எம் அண்ட் எம்
ஐசிஐசிஐ பேங்க்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.72 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

