Stock News: பங்குச் சந்தையில் ரெட் அலர்ட் - சென்செக்ஸ் 700+ புள்ளிகள் சரிவு
ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் பேரல் விலை மீண்டும் 100 டாலருக்கு மேலாக உயர்ந்தது. சர்வதேச சந்தைகளின் பாதகப் போக்கு எதிரொலியாகவும் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால், இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 632.68 புள்ளிகள் சரிந்து 74,189.55 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 216.15 புள்ளிகள் சரிந்து 23,222.55 ஆக இருந்தது.
“ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் பேரல் விலை மீண்டும் 100 டாலருக்கு மேலாக உயர்ந்தது. சர்வதேச சந்தைகளின் பாதகப் போக்கு எதிரொலியாகவும் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா, சன் பார்மா, எடர்னல் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. ஏனைய நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் சென்செக்ஸ் 721.86 புள்ளிகள் சரிந்து 74,106.39 ஆகவும், நிஃப்டி 231.05 புள்ளிகள் சரிந்து 23,215.75 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகப் போக்கு நிலவுகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் பேரல் விலை மீண்டும் 100 டாலருக்கு மேலாக உயர்ந்தது. சர்வதேச சந்தைகளின் பாதகப் போக்கு எதிரொலியாகவும் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டெக் மஹிந்திரா
சன் பார்மா
எடர்னல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
டாடா ஸ்டீல்
ஐடிசி
பஜாஜ் ஃபின்சர்வ்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எல் அண்ட் டி
இண்டஸ்இண்ட் பேங்க்
நெஸ்லே இந்தியா
ஆக்சிஸ் பேங்க்
எஸ்பிஐ
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பாரதி ஏர்டெல்
டைடன் கம்பெனி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
என்டிபிசி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
மாருதி சுசுகி
இன்போசிஸ்
எம் அண்ட் எம்
டிசிஎஸ்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.85 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

