Stock News: எகிறிய கச்சா எண்ணெய் - சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு!
ஈரான் போர் பதற்றம் வலுத்துள்ளதால் கச்சா எண்ணெய் பேரல் விலை 95 டாலரை கடந்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் கடும் வீழ்ச்சி நீடிக்கிறது.
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு தாக்கத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் வெகுவாக சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 788.52 புள்ளிகள் சரிந்து 76,155.76 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 269 புள்ளிகள் சரிந்து 23,786.80 ஆக இருந்தது.
“ஈரான் போர் பதற்றம் வலுத்துள்ளதால் கச்சா எண்ணெய் பேரல் விலை 95 டாலரை கடந்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் கடும் வீழ்ச்சி நீடிக்கிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், ஐடிசி, சன் பார்மா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. ஏனைய பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.40 மணியளவில் சென்செக்ஸ் 682.29 புள்ளிகள் சரிந்து 76,261.99 ஆகவும், நிஃப்டி 244.30 புள்ளிகள் சரிந்து 76,261.99 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகப் போக்கு நிலவுகிறது. ஈரான் போர் பதற்றம் வலுத்துள்ளதால் கச்சா எண்ணெய் பேரல் விலை 95 டாலரை கடந்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் கடும் வீழ்ச்சி நீடிக்கிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
ஐடிசி
சன் பார்மா
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பாரதி ஏர்டெல்
இன்போசிஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டெக் மஹிந்திரா
எம் அண்ட் எம்
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
ஹெசிடிஎஃப்சி பேங்க்
எடர்னல்
டைடன் கம்பெனி
இண்டஸ்இண்ட் பேங்க்
டிசிஎஸ்
எல் அண்ட் டி
இந்துஸ்தான் யூனிலீவர்
மாருதி சுசுகி
டைடன் கம்பெனி
என்டிபிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
பாஜாஜ் ஃபின்சர்வ்
டாடா ஸ்டீல்
நெஸ்லே இந்தியா
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.94 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

