Stock News: அடிவாங்கும் ஐடி பங்குகள் - சென்செக்ஸ் 750+ புள்ளிகள் சரிவு
ஏஐ தாக்கத்தால் டெக் உலகின் மிகப் பெரிய நிறுவனமான Accenture-ன் வருவாய் குறைவு கணிப்பு காரணமாக, இந்திய ஐடி நிறுவனப் பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனால், இந்திய பங்குச் சந்தையில் சரிவு நிலவுகிறது
ஐடி நிறுவனப் பங்குகளின் கடும் வீழ்ச்சியால், இந்திய பங்குச் சந்தையில் பெரும் சரிவு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 786.58 புள்ளிகள் சரிந்து 76,624.90 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 210.95 புள்ளிகள் சரிந்து 23,959.80 ஆக இருந்தது.
“ஏஐ தாக்கத்தால் டெக் உலகின் மிகப் பெரிய நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) வருவாய் குறைவு கணிப்பு காரணமாக, இந்திய ஐடி நிறுவனப் பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனால், இந்திய பங்குச் சந்தையில் சரிவு நிலவுகிறது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், டைடன் கம்பெனி உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.20 மணியளவில் சென்செக்ஸ் 778.63 புள்ளிகள் சரிந்து 76,631.34 ஆகவும், நிஃப்டி 216.25 புள்ளிகள் சரிந்து 23,951.75 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் சாதகப் போக்கு நிலவுகிறது. ஏஐ தாக்கத்தால் டெக் உலகின் மிகப் பெரிய நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) வருவாய் குறைவு கணிப்பு காரணமாக, இந்திய ஐடி நிறுவனப் பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனால், இந்திய பங்குச் சந்தையில் சரிவு நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
பாரதி ஏர்டெல்
டைடன் கம்பெனி
நெஸ்லே இந்தியா
ஐசிஐசிஐ பேங்க்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
எஸ்பிஐ
சன் பார்மா
டாடா ஸ்டீல்
எடர்னல்
அதானி போர்ட்ஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மாருதி சுசுகி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எல் அண்ட் டி
ஐடிசி
கோடக் மஹிந்திரா பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.47 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

