Stock News: கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்திய பங்குச் சந்தை மீட்சி!
ஈரான் போர் பதற்றம் நீடித்தாலும் கூட, கச்சா எண்ணெய் பேரல் விலை 98 டாலராக குறைந்தது, வெளிநாட்டு முதலீட்டு வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது.
பங்குச் சந்தையில் நேற்று தொடங்கிய ஏற்றம் இன்று காலை வர்த்தகத்திலும் தொடர்ந்த நிலையில், அது நீடிக்காமல் போனது முதலீட்டாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 283.66 புள்ளிகள் உயர்ந்து 74,812.74 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 85.55 புள்ளிகள் உயர்ந்து 23,414.55 ஆக இருந்தது.
“ஈரான் போர் பதற்றம் நீடித்தாலும் கூட, கச்சா எண்ணெய் பேரல் விலை 98 டாலராக குறைந்தது, வெளிநாட்டு முதலீட்டு வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசுகி, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 10.25 மணியளவில் சென்செக்ஸ் 209.70 புள்ளிகள் உயர்ந்து 74,738.77 ஆகவும், நிஃப்டி 66.60 புள்ளிகள் உயர்ந்து 23,395.60 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் சாதகப் போக்கு நிலவுகிறது. ஈரான் போர் பதற்றம் நீடித்தாலும் கூட, கச்சா எண்ணெய் பேரல் விலை 98 டாலராக குறைந்தது, வெளிநாட்டு முதலீட்டு வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
டாடா ஸ்டீல்
ஐடிசி
சன் பார்மா
பஜாஜ் ஃபின்சர்வ்
டெக் மஹிந்திரா
இந்துஸ்தான் யூனிலீவர்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எல் அண்ட் டி
இண்டஸ்இண்ட் பேங்க்
நெஸ்லே இந்தியா
ஆக்சிஸ் பேங்க்
எஸ்பிஐ
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பாரதி ஏர்டெல்
டைடன் கம்பெனி
எடர்னல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
என்டிபிசி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
மாருதி சுசுகி
இன்போசிஸ்
எம் அண்ட் எம்
டிசிஎஸ்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.55 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

