Stock News: எகிறும் கச்சா எண்ணெய் விலை - சென்செக்ஸ் 400+ புள்ளிகள் சரிவு!
ஈரான் போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை மீணடும் பேரலுக்கு 90 டாலரைத் தாண்டியது உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் வெகுவாக சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 226.60 புள்ளிகள் சரிந்து 77,028.56 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 120.40 புள்ளிகள் சரிந்து 24,053.55 ஆக இருந்தது.
“ஈரான் போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை மீணடும் பேரலுக்கு 90 டாலரைத் தாண்டியது உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் ஹெசிடிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. ஏனைய பல நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 441.08 புள்ளிகள் சரிந்து 76,823.43 ஆகவும், நிஃப்டி 161.50 புள்ளிகள் சரிந்து 76,823.43 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. ஈரான் போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை மீணடும் பேரலுக்கு 90 டாலரைத் தாண்டியது உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
ஹெசிடிஎஃப்சி பேங்க்
பாரதி ஏர்டெல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
எடர்னல்
அதானி போர்ட்ஸ்
ஐடிசி
சன் பார்மா
எம் அண்ட் எம்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
இண்டஸ்இண்ட் பேங்க்
டிசிஎஸ்
எல் அண்ட் டி
இந்துஸ்தான் யூனிலீவர்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
பாஜாஜ் ஃபின்சர்வ்
டாடா ஸ்டீல்
நெஸ்லே இந்தியா
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.45 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

