Stock News: கச்சா எண்ணெய் விலை தாக்கம் - இந்திய பங்குச் சந்தையில் சரிவு!
ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் பதற்றம் நிலவுவது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 76 டாலராக அதிகரித்தது உள்ளிட்ட காரணிகளால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் சரிவு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 537.83 புள்ளிகள் சரிந்து 77,642.89 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 163.55 புள்ளிகள் சரிந்து 24,235.15 ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் பதற்றம் நிலவுவது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 76 டாலராக அதிகரித்தது உள்ளிட்ட காரணிகளால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் சன் பார்மா, அதானி போர்ட்ஸ், எடர்னல், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஏனைய நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 359.80 புள்ளிகள் சரிந்து 77,820.92 ஆகவும், நிஃப்டி 103.80 புள்ளிகள் சரிந்து 24,294.90 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் சரிவுப் போக்கே நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் பதற்றம் நிலவுவது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 76 டாலராக அதிகரித்தது உள்ளிட்ட காரணிகளால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
சன் பார்மா
அதானி போர்ட்ஸ்
எடர்னல்
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
டாடா ஸ்டீல்
பாரதி ஏர்டெல்
டைடன் கம்பெனி
மாருதி சுசுகி
இந்துஸ்தான் யூனிலீவர்
இண்டஸ்இண்ட் பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இன்போசிஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பஜாஜ் ஃபின்சர்வ்
டெக் மஹிந்திரா
டிசிஎஸ்
எல் அண்ட் டி
எம் அண்ட் எம்
ஏசியன் பெயின்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா ஸ்டீல்
ஐடிசி
நெஸ்லே இந்தியா
என்டிபிசி
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.14 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

