Stock News: இந்திய பங்குச் சந்தையில் 2வது நாளாக ஏற்றம் - காரணம் என்ன?
மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தே காணப்படுகிறது. எனினும், அமெரிக்க பணவீக்க குறைவு மீதான நம்பிக்கை எதிரொலியால், இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் நீடிக்கிறது.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவி வருவது, முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 185.77 புள்ளிகள் உயர்ந்து 77,400.40 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 42.15 புள்ளிகள் உயர்ந்து 24,132.60 ஆக இருந்தது.
“மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தே காணப்படுகிறது. எனினும், அமெரிக்க பணவீக்க குறைவு மீதான நம்பிக்கை எதிரொலியால், இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் நீடிக்கிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, என்டிபிசி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.45 மணியளவில் சென்செக்ஸ் 274.73 புள்ளிகள் உயர்ந்து 77,460.16 ஆகவும், நிஃப்டி 75.90 புள்ளிகள் உயர்ந்து 24,154.40 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகப் போக்கு நிலவுகிறது. மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தே காணப்படுகிறது. எனினும், அமெரிக்க பணவீக்க குறைவு மீதான நம்பிக்கை எதிரொலியால், இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் நீடிக்கிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
மாருதி சுசுகி
என்டிபிசி
டிசிஎஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இன்போசிஸ்
நெஸ்லே இந்தியா
டெக் மஹிந்திரா
சன் பார்மா
அதானி போர்ட்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பாரதி ஏர்டெல்
எம் அண்ட் எம்
எஸ்பிஐ
டைடன் கம்பெனி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டாடா மோட்டார்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டெக் மஹிந்திரா
எம் அண்ட் எம்
ஏசியன் பெயின்ட்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஐடிசி
நெஸ்லே இந்தியா
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
எல் அண்ட் டி
பஜாஜ் ஃபின்சர்வ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
எடர்னல்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.30 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

