Stock News: கச்சா எண்ணெய் விலை சரிவு - சென்செக்ஸ் 450+ புள்ளிகள் உயர்வு!
அமைதி ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா - ஈரான் சம்மதம், கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுகிறது.
கச்சா எண்ணெய் விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 407.12 புள்ளிகள் உயர்ந்து 77,210.02 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 114.75 புள்ளிகள் உயர்ந்து 24,129.95 ஆக இருந்தது.
“அமைதி ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா - ஈரான் சம்மதம், கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், அதானி போர்ட்ஸ், டைடன் கம்பெனி உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.20 மணியளவில் சென்செக்ஸ் 465.53 புள்ளிகள் உயர்ந்து 77,268.43 ஆகவும், நிஃப்டி 140.85 புள்ளிகள் உயர்ந்து 24,153.95 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
ஆசிய பங்குச் சந்தைகளில் சாதகப் போக்கு நிலவுகிறது. அமைதி ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா - ஈரான் சம்மதம், கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
எஸ்பிஐ
சன் பார்மா
டாடா ஸ்டீல்
எடர்னல்
இந்துஸ்தான் யூனிலீவர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மாருதி சுசுகி
எல் அண்ட் டி
கோடக் மஹிந்திரா பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
என்டிபிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
பாரதி ஏர்டெல்
நெஸ்லே இந்தியா
ஐசிஐசிஐ பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபின்சர்வ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஐடிசி
ஏசியன் பெயின்ட்ஸ்
அதானி போர்ட்ஸ்
டைடன் கம்பெனி
இண்டஸ்இண்ட் பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.42 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

