Stock News: சந்தையில் மீண்டும் ரெட் அலர்ட் - சென்செக்ஸ் 1,200+ புள்ளிகள் சரிவு!
மேற்கு ஆசிய போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கு மேலாக உயர்ந்திருப்பது, சர்வதேச சந்தைகளில் வீழ்ச்சி முதலானவையே இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு காரணம்.
மேற்கு ஆசிய போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதன் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ் 1,200+ புள்ளிகள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 926.92 புள்ளிகள் சரிந்து 74,346.53 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 280.95 புள்ளிகள் சரிந்து 23,025.50 ஆக இருந்தது.
“மேற்கு ஆசிய போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கு மேலாக உயர்ந்திருப்பது, சர்வதேச சந்தைகளில் வீழ்ச்சி முதலானவையே இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு காரணம்,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டிசிஎஸ், நெஸ்லே இந்தியா, சன் ஃபார்மா ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. ஏனைய நிறுவனப் பங்குகள் அனைத்தும் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 12.15 மணியளவில் சென்செக்ஸ் 1,282.86 புள்ளிகள் சரிந்து 73,990.59 ஆகவும், நிஃப்டி 373.20 புள்ளிகள் சரிந்து 22,933.25 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங்கில் சரிவுப் போக்கு நிலவுகிறது. மேற்கு ஆசிய போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கு மேலாக உயர்ந்திருப்பது, சர்வதேச சந்தைகளில் வீழ்ச்சி முதலானவையே இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு காரணம்.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
நெஸ்லே இந்தியா
சன் பார்மா
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
எஸ்பிஐ
இண்டஸ்இண்ட் பேங்க்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டைடன் கம்பெனி
ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்
இன்போசிஸ்
பாரதி ஏர்டெல்
எடர்னல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டாடா மோட்டாரஸ்
ஆக்ஸிஸ் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
என்டிபிசி
ஐடிசி
டாடா ஸ்டீல்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
டெக் மஹிந்திரா
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.61 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

