Stock News: இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் இறக்கம் - காரணம் என்ன?
ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச பங்குச் சந்தைகளின் போக்குகள் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு நிலவுகிறது.
ஈரான் போர் பதற்றம் உள்ளிட்ட காரணிகளால், இந்திய பங்குச் சந்தையில் இன்று காலை முதலே சரிவுப் போக்கு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 108.80 புள்ளிகள் சரிந்து 77,368.68 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 26.15 புள்ளிகள் சரிந்து 24,189.70 ஆக இருந்தது.
“ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச பங்குச் சந்தைகளின் போக்குகள் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் கோடக் மஹிந்திரா பேங்க், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. எம் அண்ட் எம், மாருதி சுசுகி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைடன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 12.20 மணியளவில் சென்செக்ஸ் 221.57 புள்ளிகள் சரிந்து 77,251.37 ஆகவும், நிஃப்டி 54.10 புள்ளிகள் சரிந்து 24,153.65 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகப் போக்கு நிலவுகிறது. ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச பங்குச் சந்தைகளின் போக்குகள் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா மோட்டார்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
டெக் மஹிந்திரா
சன் பார்மா
அதானி போர்ட்ஸ்
டைடன் கம்பெனி
பஜாஜ் ஃபைனான்ஸ்
எடர்னல்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
எம் அண்ட் எம்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
டாடா ஸ்டீல்
எஸ்பிஐ
பஜாஜ் ஃபின்சர்வ்
ஐடிசி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டிசிஎஸ்
எல் அண்ட் டி
இந்துஸ்தான் யூனிலீவர்
ஏசியன் பெயின்ட்ஸ்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
நெஸ்லே இந்தியா
பாரதி ஏர்டெல்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.46 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

