Stock News: அடிவாங்கும் வங்கி பங்குகள் - சென்செக்ஸ் 450+ புள்ளிகள் சரிவு!
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலராக உயர்ந்துள்ளது. இத்துடன், ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் காலாண்டு முடிவுகளில் பாதகம் காணப்படுவதால் வங்கிப் பங்குகள் சரிவை சந்தித்தன.
வங்கி நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் சரிவு நிலவி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 523.22 புள்ளிகள் சரிந்து 77,628.23 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 134.10 புள்ளிகள் சரிந்து 24,198.25 ஆக இருந்தது.
“அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நீடிப்பதால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலராக உயர்ந்துள்ளது. இத்துடன், ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் காலாண்டு முடிவுகளில் பாதகம் காணப்படுவதால் வங்கிப் பங்குகள் சரிவை சந்தித்தன. இதனால், இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், டைடன் கம்பெனி, டாடா ஸ்டீல், எல் அண்ட் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஆக்சிஸ் பேங்க், ஹெச்சிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, கோடக் மஹிந்திரா பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 456.68 புள்ளிகள் சரிந்து 77,694.77 ஆகவும், நிஃப்டி 114.30 புள்ளிகள் சரிந்து 24,220.00 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நீடிப்பதால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலராக உயர்ந்துள்ளது. இத்துடன், ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் காலாண்டு முடிவுகளில் பாதகம் காணப்படுவதால் வங்கிப் பங்குகள் சரிவை சந்தித்தன. இதனால், இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
ஐசிஐசிஐ பேங்க்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பாரதி ஏர்டெல்
டெக் மஹிந்திரா
நெஸ்லே இந்தியா
ஏசியன் பெயின்ட்ஸ்
சன் பார்மா
எடர்னல்
ஐடிசி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
அதானி போர்ட்ஸ்
டைடன் கம்பெனி
டாடா ஸ்டீல்
எல் அண்ட் டி
எம் அண்ட் எம்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஆக்சிஸ் பேங்க்
ஹெச்சிஎஃப்சி பேங்க்
எஸ்பிஐ
கோடக் மஹிந்திரா பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
இந்துஸ்தான் யூனிலீவர்
டாடா மோட்டார்ஸ்
இன்போசிஸ்
டிசிஎஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
மாருதி சுசுகி
கோடக் மஹிந்திரா பேங்க்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.45 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

