Stock News: 100 டாலரை தொடும் கச்சா எண்ணெய் - சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு!
அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தொடுகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி நீடிக்கிறது.
கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்தது உள்ளிட்ட காரணிகளால், இந்திய பங்குச் சந்தையில் இன்றும் கடும் வீழ்ச்சி நீடித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 500.25 புள்ளிகள் சரிந்து 75,060.61 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 129.40 புள்ளிகள் சரிந்து 23,506.10 ஆக இருந்தது.
“அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தொடுகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி நீடிக்கிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், என்டிபிசி, எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, எஸ்பிஐ, டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.40 மணியளவில் சென்செக்ஸ் 512.73 புள்ளிகள் சரிந்து 75,064.84 ஆகவும், நிஃப்டி 114.40 புள்ளிகள் சரிந்து 23,520.70 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகப் போக்கு நிலவுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தொடுகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி நீடிக்கிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
அதானி போர்ட்ஸ்
என்டிபிசி
எல் அண்ட் டி
இண்டஸ்இண்ட் பேங்க்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பஜாஜ் ஃபின்சர்வ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐடிசி
எஸ்பிஐ
டிசிஎஸ்
இன்போசிஸ்
நெஸ்லே இந்தியா
எடர்னல்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
சன் பார்மா
பாரதி ஏர்டெல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டெக் மஹிந்திரா
டைடன் கம்பெனி
டாடா மோட்டார்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
மாருதி சுசுகி
எம் அண்ட் எம்
ஐசிஐசிஐ பேங்க்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.96 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

