Stock News: மீண்டும் ஹார்முஸ் பதற்றம் - சென்செக்ஸ் 500+ புள்ளிகள் சரிவு!
ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திலும் தடுமாற்றம் நீடிக்கிறது.
ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சரிவுப் போக்கு வலுத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மே 8) காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 536.66 புள்ளிகள் சரிந்து 77,331.75 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 166.95 புள்ளிகள் சரிந்து 24,170.80 ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திலும் தடுமாற்றம் நீடிக்கிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய நண்பகல் வர்த்தகத்தில் நெஸ்லே இந்தியா, இன்போசிஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. சன் ஃபார்மா, பாரதி ஏர்டெல், எம் அண்ட் எம் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளன.
இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 501.66 புள்ளிகள் சரிந்து 77,342.86 ஆகவும், நிஃப்டி 146.35 புள்ளிகள் சரிந்து 24,180.30 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் தடுமாற்றச் சூழலே நிலவியது. ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திலும் தடுமாற்றம் நீடிக்கிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
நெஸ்லே இந்தியா
இன்போசிஸ்
டாடா ஸ்டீல்
என்டிபிசி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
சன் பார்மா
பாரதி ஏர்டெல்
எம் அண்ட் எம்
கோடக் மஹிந்திரா பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எடர்னல்
ஐசிஐசிஐ பேங்க்
டாடா மோட்டார்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
மாருதி சுசுகி
ஐடிசி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டைடன் கம்பெனி
எல் அண்ட் டி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.41 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

