Stock News: எகிறும் கச்சா எண்ணெய் விலை - சென்செக்ஸ் 500+ புள்ளிகள் சரிவு!
மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை நெருங்கியுள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் பாதக போக்கு எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையிலும் சரிவு நிலவுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து வீழ்ச்சி நிலவி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 724.95 புள்ளிகள் சரிந்து 73,518.39 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 222.45 புள்ளிகள் சரிந்து 23,138.60 ஆக இருந்தது.
“மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை நெருங்கியுள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் பாதக போக்கு எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையிலும் சரிவு நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் எம் அண்ட் எம், இந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 536.55 புள்ளிகள் சரிந்து 73,706.80 ஆகவும், நிஃப்டி 169.90 புள்ளிகள் சரிந்து 23,196.80 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் தடுமாற்றம் நிலவுகிறது. மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை நெருங்கியுள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் பாதக போக்கு எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையிலும் சரிவு நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
எம் அண்ட் எம்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஏசியன் பெயின்ட்ஸ்
எல் அண்ட் டி
இண்டஸ்ட்இண்ட் பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
இன்போசிஸ்
எடர்னல்
டைடன் கம்பெனி
டெக் மஹிந்திரா
ஐசிஐசிஐ பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
மாருதி சுசுகி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டிசிஎஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டாடா ஸ்டீல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
நெஸ்லே இந்தியா
டெக் மஹிந்திரா
பாரதி ஏர்டெல்
சன் பார்மா
என்டிபிசி
ஐடிசி
எஸ்பிஐ
அதானி போர்ட்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.42 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

