Stock News: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் புதிய உச்சம் தொட்டு சாதனை!
சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் உயரும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து அதிகரிப்பு காரணமாக, இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி நிலவுவதாக வர்த்தக நிபுணர்கள் கூறினர்.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பெரிய அளவில் எழுச்சி நிலவும் சூழலில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (நவ.27) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 416.67 புள்ளிகள் உயர்ந்து 86,026.18 என்ற புதிய உச்சம் தொட்டது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 101.65 புள்ளிகள் உயர்ந்து 26,277 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முன் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 27-ல் 85,978.25 என்ற உச்சத்தை தொட்டது. அதே நாளில், நிஃப்டியும் உச்சம் தொட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் உயரும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து அதிகரிப்பு காரணமாக, இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி நிலவுவதாக வர்த்தக நிபுணர்கள் கூறினர்.
மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, சன் பார்மா, நெஸ்லே இந்தியா, ஆக்சிஸ் பேங்க், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றத்தையும், டெக் மஹிந்திரா, மாருதி சுசுகி, டிசிஎஸ், எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவையும் சந்தித்தன.
இன்று முற்பகல் 11.45 மணியளவில் சென்செக்ஸ் 293.72 புள்ளிகள் உயர்ந்து 85,903.23 ஆகவும், நிஃப்டி 65.35 புள்ளிகள் உயர்ந்து 26,270.65 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தற்போது தென் கொரியா, ஹாங்காங், ஜப்பான், ஷாங்காய் என அனைத்திலும் ஏற்றம் நிலவுகிறது. இந்த சாதகப் போக்கின் காரணமாகவும், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து கூடியதன் விளைவாகவும் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்தன. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் உயரும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியிருக்கிறது.

ஏற்றம் காணும் பங்குகள்:
எல் அண்ட் டி
பஜாஜ் ஃபின்சர்வ்
என்டிபிசி
சன் பார்மா
நெஸ்லே இந்தியா
ஆக்சிஸ் பேங்க்
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
அதானி போர்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
டைடன் கம்பெனி
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
ஐடிசி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டெக் மஹிந்திரா
மாருதி சுசுகி
டிசிஎஸ்
எம் அண்ட் எம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பாரதி ஏர்டெல்
டாடா ஸ்டீல்
எஸ்பிஐ
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எடர்னல் லிட்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.24 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

