Stock News: மேற்கு ஆசிய பதற்றம் - இந்திய பங்குச் சந்தையில் ரெட் அலர்ட்!
ஈரான் - அமெரிக்க மோதலால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம் வலுத்துள்ளது, கச்சா எண்ணெய் பேரல் விலை 80 டாலரை நெருங்கியது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி நிலவுகிறது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் எதிரொலியாக, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தொடர்ந்து வீழ்ச்சி நிலவி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 616.15 புள்ளிகள் சரிந்து 76,946.97 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 190.50 புள்ளிகள் சரிந்து 24,015 ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்க மோதலால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம் வலுத்துள்ளது, கச்சா எண்ணெய் பேரல் விலை 80 டாலரை நெருங்கியது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 154.84 புள்ளிகள் சரிந்து 77,414.55 ஆகவும், நிஃப்டி 58.40 புள்ளிகள் சரிந்து 24,148.50 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. ஈரான் - அமெரிக்க மோதலால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம் வலுத்துள்ளது, கச்சா எண்ணெய் பேரல் விலை 80 டாலரை நெருங்கியது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
இன்போசிஸ்
எம் அண்ட் எம்
எஸ்பிஐ
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டைடன் கம்பெனி
என்டிபிசி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
டாடா ஸ்டீல்
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
பாரதி ஏர்டெல்
இந்துஸ்தான் யூனிலீவர்
இண்டஸ்இண்ட் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
டெக் மஹிந்திரா
எல் அண்ட் டி
எம் அண்ட் எம்
ஏசியன் பெயின்ட்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஐடிசி
நெஸ்லே இந்தியா
சன் பார்மா
அதானி போர்ட்ஸ்
எடர்னல்
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.75 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

