Stock News: கச்சா எண்ணெய் விலை தாக்கம் - பங்குச் சந்தையில் ரெட் அலர்ட்!
மேற்கு ஆசிய போர் பதற்றம் வலுத்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 96 டாலரை தாண்டிவிட்டது. இது, இந்திய பங்குச் சந்தையிலும் எதிர்மறை தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்திருப்பது, இந்திய பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 230.95 புள்ளிகள் சரிந்து 76,521.02 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 57.15 புள்ளிகள் சரிந்து 23,937 ஆக இருந்தது.
“மேற்கு ஆசிய போர் பதற்றம் வலுத்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 96 டாலரை தாண்டிவிட்டது. இது, இந்திய பங்குச் சந்தையிலும் எதிர்மறை தாக்கத்தை உருவாக்கியுள்ளது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் எடர்னல், எம் அண்ட் எம், கோடக் மஹிந்திரா பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.45 மணியளவில் சென்செக்ஸ் 162.47 புள்ளிகள் சரிந்து 76,592.58 ஆகவும், நிஃப்டி 48.65 புள்ளிகள் சரிந்து 23,947.60 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதகப் போக்கு நிலவுகிறது. மேற்கு ஆசிய போர் பதற்றம் வலுத்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 96 டாலரை தாண்டிவிட்டது. இது, இந்திய பங்குச் சந்தையிலும் எதிர்மறை தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
எடர்னல்
எம் அண்ட் எம்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஐடிசி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டெக் மஹிந்திரா
எல் அண்ட் டி
இந்துஸ்தான் யூனிலீவர்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
சன் பார்மா
இறங்கு முகம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா ஸ்டீல்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
நெஸ்லே இந்தியா
ஆக்சிஸ் பேங்க்
பாரதி ஏர்டெல்
ஐசிஐசிஐ பேங்க்
என்டிபிசி
டைடன் கம்பெனி
அதானி போர்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
மாருதி சுசுகி
டிசிஎஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இன்போசிஸ்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.62 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

