Stock News: அமைதி ஒப்பந்த இழுபறி தாக்கம் - பங்குச் சந்தையில் தடுமாற்றம் நீடிப்பு!
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்த இழுபறி, வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு, ஐடி நிறுவனப் பங்குகளின் சரிவு உள்ளிட்ட காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுவதால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் ஏற்றமும் இறக்கமுமாக தடுமாற்றம் நீடிக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 103.95 புள்ளிகள் சரிந்து 76,624.42 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 40.10 புள்ளிகள் சரிந்து 23,908.80 ஆக இருந்தது.
“அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்த இழுபறி, வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு, ஐடி நிறுவனப் பங்குகளின் சரிவு உள்ளிட்ட காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய பிற்பகல் வர்த்தகத்தில் மாருதி சுசுகி, டைடன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ், டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 12.15 மணியளவில் சென்செக்ஸ் 57.44 புள்ளிகள் சரிந்து 76,670.93 ஆகவும், நிஃப்டி 17.45 புள்ளிகள் சரிந்து 23,928.80 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்த இழுபறி, வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு, ஐடி நிறுவனப் பங்குகளின் சரிவு உள்ளிட்ட காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது
ஏறுமுகம் காணும் பங்குகள்:
மாருதி சுசுகி
டைடன் கம்பெனி
டாடா மோட்டார்ஸ்
நெஸ்லே இந்தியா
இண்டஸ்இண்ட் பேங்க்
அதானி போர்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
எடர்னல்
பாரதி ஏர்டெல்
பஜாஜ் ஃபின்சர்வ்
எம் அண்ட் எம்
ஏசியன் பெயின்ட்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
எஸ்பிஐ
ஹெச்சிஎஃப்டி பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
சன் பார்மா
ஆக்சிஸ் பேங்க்
எல் அண்ட் டி
என்டிபிசி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஐசிஐசிஐ பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா ஸ்டீல்
ஐடிசி
டெக் மஹிந்திரா
இந்துஸ்தான் யூனிலீவர்
ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்
டிசிஎஸ்
இன்போசிஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.63 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

