Stock News: இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் தடுமாற்றம் - காரணம் என்ன?
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவது குறித்த எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. எனினும், சர்வதேச போக்குகளின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் தடுமாற்றம் நிலவுகிறது.
சர்வதேச சந்தைப் போக்குகளின் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 111.23 புள்ளிகள் சரிந்து 77,044.39 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 26.85 புள்ளிகள் சரிந்து 24,058.85 ஆக இருந்தது.
“அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவது குறித்த எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. எனினும், சர்வதேச போக்குகளின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் தடுமாற்றம் நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி பேங்க், எம் அண்ட் எம், என்டிசிபி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. எஸ்பிஐ, சன் பார்மா, டாடா ஸ்டீல், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 42.66 புள்ளிகள் சரிந்து 77,112.95 ஆகவும், நிஃப்டி 1.65 புள்ளிகள் சரிந்து 24,084.05 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவது குறித்த எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. எனினும், சர்வதேச போக்குகளின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் தடுமாற்றம் நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி பேங்க்
எம் அண்ட் எம்
என்டிசிபி
டாடா மோட்டார்ஸ்
நெஸ்லே இந்தியா
ஏசியன் பெயின்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ
சன் பார்மா
டாடா ஸ்டீல்
எஸ்பிஐ
எடர்னல்
அதானி போர்ட்ஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
இன்போசிஸ்
ஐசிஐசிஐ பேங்க்
பாரதி ஏர்டெல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
மாருதி சுசுகி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
எல் அண்ட் டி
ஐடிசி
கோடக் மஹிந்திரா பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.47 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

