Stock News: மும்பை, தேசிய பங்குச் சந்தையில் மீண்டும் தடுமாற்றம் ஏன்?
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், சர்வதேச சந்தைகளில் பாதகப் போக்கு நிலவுகிறது. இதனால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது.
மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டதால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 63.65 புள்ளிகள் சரிந்து 77,047.63 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 16.55 புள்ளிகள் சரிந்து 24,070.20 ஆக இருந்தது.
“அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், சர்வதேச சந்தைகளில் பாதகப் போக்கு நிலவுகிறது. இதனால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் எடர்னல், சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், இன்போசிஸ்
உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.15 மணியளவில் சென்செக்ஸ் 10.58 புள்ளிகள் உயர்ந்து 77,111.05 ஆகவும், நிஃப்டி 16.85 புள்ளிகள் உயர்ந்து 24,072.85 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும்பாலும் பாதகப் போக்கு நிலவுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், சர்வதேச சந்தைகளில் பாதகப் போக்கு நிலவுகிறது. இதனால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
எடர்னல்
சன் பார்மா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
நெஸ்லே இந்தியா
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா ஸ்டீல்
ஆக்சிஸ் பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
என்டிபிசி
ஐடிசி
டெக் மஹிந்திரா
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டைடன் கம்பெனி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
எல் அண்ட் டி
எஸ்பிஐ
அதானி போர்ட்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டிசிஎஸ்
இன்போசிஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பாரதி ஏர்டெல்
மாருதி சுசுகி
டாடா மோட்டார்ஸ்
எம் அண்ட் எம்
கோடக் மஹிந்திரா
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.32 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

