Stock News: இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ‘நிதானம்’ ஏன்?
மேற்காசிய பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 94 டாலரை நெருங்கியுள்ளது. சர்வதேச சந்தைகளில் பாதகமான போக்கே நிலவுகிறது. இதனால், இந்திய பங்குச் சந்தையிலும் முதலீட்டாளர்கள் நிதானம் காட்டி வருகின்றனர்.
இந்திய பங்குச் சந்தையில் நேற்று ஓரளவு ஏற்றம் இருந்த நிலையில், இன்று நிதானமான போக்குடன் பெரிதாக ஏற்ற இறக்கமின்றி வர்த்தகம் நடக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 62.60 புள்ளிகள் உயர்ந்து 77,595.14 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 10.65 புள்ளிகள் உயர்ந்து 24,244.80 ஆக இருந்தது.
“மேற்காசிய பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 94 டாலரை நெருங்கியுள்ளது. சர்வதேச சந்தைகளில் பாதகமான போக்கே நிலவுகிறது. இதனால், இந்திய பங்குச் சந்தையிலும் முதலீட்டாளர்கள் நிதானம் காட்டி வருகின்றனர்,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் நெஸ்லே இந்தியா, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. டாடா ஸ்டீல், எடர்னல், ஆக்சிஸ் பேங்க், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 12.20 மணியளவில் சென்செக்ஸ் 38.26 புள்ளிகள் உயர்ந்து 77,575.98 ஆகவும், நிஃப்டி 5.20 புள்ளிகள் உயர்ந்து 24,237.05 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. மேற்காசிய பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 94 டாலரை நெருங்கியுள்ளது. சர்வதேச சந்தைகளில் பாதகமான போக்கே நிலவுகிறது. இதனால், இந்திய பங்குச் சந்தையிலும் முதலீட்டாளர்கள் நிதானம் காட்டி வருகின்றனர்
ஏறுமுகம் காணும் பங்குகள்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
கோடக் மஹிந்திரா பேங்க்
என்டிபிசி
நெஸ்லே இந்தியா
டிசிஎஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
பாரதி ஏர்டெல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
இன்போசிஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
பாஜாஜ் ஃபின்சர்வ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
எடர்னல்
ஆக்சிஸ் பேங்க்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
எம் அண்ட் எம்
அதானி போர்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
டெக் மஹிந்திரா
எஸ்பிஐ
இந்துஸ்தான் யூனிலீவர்
எல் அண்ட் டி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
சன் பார்மா
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐடிசி
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.67 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

