Stock News: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சற்றே உயர்வு!
சர்வதேசப் பங்குச் சந்தைகளில் நிலவி வரும் பலவீனமான போக்குகள் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. அரசாங்கம் நுகர்வை அதிகரிக்க வருமானவரி, ஜிஎஸ்டி கழிவுகளை நீட்டித்திருந்தாலும் வருவாய் கவலையளிப்பதாகவே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் புதன்கிழமையான இன்று ஏற்றமும் இறக்கமுமான சூழ்நிலை நிலவுகிறது. இரண்டு பெஞ்ச்மார்க் பங்குச் சந்தைக் குறியீடும் மாற்றமில்லாமல் ஃபிளாட்டாக தொடங்கி சற்று முன் சற்றே உயர்வு கண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (நவ.19) காலை வர்த்தகம் தொடங்கி சற்று முன் நிலவரப்படி, சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்வு கண்டு 84,851 புள்ளிகளாக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 25,962 புள்ளிகளாக உள்ளது.
சர்வதேசப் பங்குச் சந்தைகளில் நிலவி வரும் பலவீனமான போக்குகள் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. அரசாங்கம் நுகர்வை அதிகரிக்க வருமானவரி, ஜிஎஸ்டி கழிவுகளை நீட்டித்திருந்தாலும் வருவாய் கவலையளிப்பதாகவே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பரந்துபட்ட சம்பள உயர்வு சுணக்கம் கண்டுள்ளதால் பொருளாதார உத்வேகம் சுணக்கம் கண்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அடுத்த 10 வாரங்களுக்கு பிப்ரவரி மாதம் பட்ஜெட்டை எதிர்நோக்கி பங்குச் சந்தைகளில் சற்றே ஏற்ற நிலை ஏற்படலாம், என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்,
இன்றைய வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், பிஎஸ்இ லிமிடெட், டிசிஎஸ், ஹெச்.சி.எல்., ஐசிஐசிஐ, மேக்ஸ் ஹெல்த்கேர் பங்குகள் உயர்வு காண, நிப்டி வங்கிக் குறியீடும் மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடும் சரிவுப்போக்கைக் காண்கின்றன. மேலும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி , ரிலையன்ஸ், ஒன் 97, இண்டெர் குளோப் ஏவிஐ நிறுவனங்கள் சரிவுப்போக்கைச் சந்தித்து வருகின்றன.
இன்று பிற்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 234 புள்ளிகள் அதிகரித்து 84,906 புள்ளிகளாகவும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 64 புள்ளிகள் அதிகரித்து 25,974 புள்ளிகளாகவும் உள்ளன.

காரணம் என்ன?
முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக முதலீடு செய்வதாலும் உலக அளவில் பங்குச் சந்தைகள் பலவீனமாகவே காணப்படுவதாலும் இந்தியப் பங்குச் சந்தைகளில் பெரிய அளவில் ஏற்றம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். இன்றைய உயர்வுக்குக் காரணம் ஐடி துறை பங்குகள் பெரிய அளவில் முதலீடுகளைக் கண்டுள்ளதால் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்றம் கண்ட பங்குகள்
இன்போசிஸ்
பிஎஸ்இ லிமிடெட்
டிசிஎஸ்
ஹெச்.சி.எல்
ஐசிஐசிஐ வங்கி
மேக்ஸ் ஹெல்த் கேர்
ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
வோடஃபோன் ஐடியா
ரிலையன்ஸ்
ஒன் 97 காம்
பி.எச்.இ.எல்.
இண்டெர்குளோப்
ஹிந்துஸ்தான் ஏரான்
மாருதி சுசுகி
இந்திய ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.44ஆக இருந்தது.

