Stock News: இந்தியப் பங்குச் சந்தையில் சரிவுக்குப் பின் மீட்சி - காரணம் என்ன?
ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதும் பாதகம் என்றாலும் கூட, வங்கி நிறுவனப் பங்குகளுக்கு மவுசு கூடியது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் தொடங்கியதன் தாக்கம் தந்தாலும் கூட, சரிவுக்குப் பின் இந்திய பங்குச் சந்தையில் மீட்சிப் போக்கு நீடித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 358.54 புள்ளிகள் சரிந்து 73,624.64 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 117 புள்ளிகள் சரிந்து 23,098.30 ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதும் பாதகம் என்றாலும் கூட, வங்கி நிறுவனப் பங்குகளுக்கு மவுசு கூடியது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய பிற்பகல் வர்த்தகத்தில் ஐசிஐசிஐ பேங்க், ஆக்சிஸ் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், பாரதி ஏர்டெல், நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 12.10 மணியளவில் சென்செக்ஸ் 270.14 புள்ளிகள் உயர்ந்து 74,253.32 ஆகவும், நிஃப்டி 69.35 புள்ளிகள் உயர்ந்து 23,284.30 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் தடுமாற்றம் நிலவுகிறது. “ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதும் பாதகம் என்றாலும் கூட, வங்கி நிறுவனப் பங்குகளுக்கு மவுசு கூடியது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
பாரதி ஏர்டெல்
நெஸ்லே இந்தியா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
கோடக் மஹிந்திரா பேங்க்
டைடன் கம்பெனி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
சன் பார்மா
மாருதி சுசுகி
என்டிபிசி
எம் அண்ட் எம்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
அதானி போர்ட்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
எஸ்பிஐ
ஏசியன் பெயின்ட்ஸ்
எல் அண்ட் டி
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐடிசி
எடர்னல்
டாடா ஸ்டீல்
டெக் மஹிந்திரா
டாடா மோட்டார்ஸ்
இன்போசிஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.68 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

