Stock News: கச்சா எண்ணெய் விலை சரிவு - பங்குச் சந்தையில் பச்சை விளக்கு!
ஈரானில் அமைதி நிலவுவது, கச்சா எண்ணெய் விலை 70 டாலராக குறைந்தது உள்ளிட்ட சாதகமான போக்கு காரணமாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையிலும் எழுச்சி நீடிக்கிறது.
கச்சா எண்ணெய் விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் ஏற்றம் நீடிக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 377.40 புள்ளிகள் உயர்ந்து 77,269.54 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 106.70 புள்ளிகள் உயர்ந்து 24,113.25 ஆக இருந்தது.
“ஈரானில் அமைதி நிலவுவது, கச்சா எண்ணெய் விலை 70 டாலராக குறைந்தது உள்ளிட்ட சாதகமான போக்கு காரணமாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையிலும் எழுச்சி நீடிக்கிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, மாருதி சுசுகி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 10.20 மணியளவில் சென்செக்ஸ் 227.72 புள்ளிகள் உயர்ந்து 77,150.36 ஆகவும், நிஃப்டி 70.55 புள்ளிகள் உயர்ந்து 24,076.40 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகப் போக்கு நிலவுகிறது. ஈரானில் அமைதி நிலவுவது, கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்ட சாதகமான போக்கு காரணமாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையிலும் எழுச்சி நீடிக்கிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
ஐசிஐசிஐ பேங்க்
இன்போசிஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டாடா மோட்டார்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்
டெக் மஹிந்த்ரா
எஸ்பிஐ
டிசிஎஸ்
டைடன் கம்பெனி
இந்துஸ்தான் யூனிலீவர்
நெஸ்லே இந்தியா
அதானி போர்ட்ஸ்
எடர்னல்
எம் அண்ட் எம்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
சன் பார்மா
ஆக்சிஸ் பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐடிசி
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபைனான்ஸ்
பாரதி ஏர்டெல்
இண்டஸ்இண்ட் பேங்க்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
எல் அண்ட் டி
என்டிபிசி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.63 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

