Stock News: யுஎஸ் வங்கி வட்டி விகித தாக்கம் - பங்குச் சந்தையில் ‘நிதான’ நிலை!
ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒருபக்கம் இருக்க, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை முதலீட்டார்கள் நிதானம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கொள்கை முடிவுகள் இப்போது இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 86.49 புள்ளிகள் உயர்ந்து 74,422.94 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 50.1 புள்ளிகள் உயர்ந்து 23,267.70 ஆக இருந்தது.
“ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒருபக்கம் இருக்க, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை முதலீட்டார்கள் நிதானம் காட்டி வருகின்றனர்,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் மாருதி சுசுகி, எம் அண்ட் எம், என்டிபிசி, எடர்னல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.40 மணியளவில் சென்செக்ஸ் 41.45 புள்ளிகள் உயர்ந்து 74,377.91 ஆகவும், நிஃப்டி 55.60 புள்ளிகள் உயர்ந்து 23,273.20 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒருபக்கம் இருக்க, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை முதலீட்டார்கள் நிதானம் காட்டி வருகின்றனர்.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
மாருதி சுசுகி
எம் அண்ட் எம்
என்டிபிசி
எடர்னல்
இண்டஸ்இண்ட் பேங்க்
டாடா ஸ்டீல்
ஐடிசி
எல் அண்ட் டி
ஆக்சிஸ் பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
சன் பார்மா
டாடா மோட்டார்ஸ்
அதானி போர்ட்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பாரதி ஏர்டெல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டெக் மஹிந்திரா
எஸ்பிஐ
ஐசிஐசிஐ பேங்க்
நெஸ்லே இந்தியா
இந்துஸ்தான் யூனிலீவர்
டைடன் கம்பெனி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டிசிஎஸ்
இன்போசிஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.88 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

