Stock News: சர்வதேச நிலவர தாக்கம் - மீளும் இந்திய பங்குச் சந்தை!
கச்சா எண்ணெய் விலை ஓரளவு குறைந்துள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகளில் சாதகமான சூழல் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
கடந்த சில தினங்களால தொடர்ந்து சரிந்து வந்த இந்திய பங்குச் சந்தையில் இன்று காலை ஏற்றம் நிலவியது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 285 புள்ளிகள் உயர்ந்து 77,944.02 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 23.25 புள்ளிகள் உயர்ந்து 24,356.10 ஆக இருந்தது.
“கச்சா எண்ணெய் விலை ஓரளவு குறைந்துள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகளில் சாதகமான சூழல் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஆக்சிஸ் பேங்க், கோடக் மஹிந்திரா பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.40 மணியளவில் சென்செக்ஸ் 100.20 புள்ளிகள் உயர்ந்து 77,209.34 ஆகவும், நிஃப்டி 23.35 புள்ளிகள் சரிந்து 24,311.20 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் சாதகப் போக்கு நிலவுகிறது. கச்சா எண்ணெய் விலை ஓரளவு குறைந்துள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகளில் சாதகமான சூழல் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன
ஏறுமுகம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ
ஐசிஐசிஐ பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எடர்னல்
பஜாஜ் ஃபின்சர்வ்
அதானி போர்ட்ஸ்
ஐடிசி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
சன் பார்மா
எம் அண்ட் எம்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
டாடா ஸ்டீல்
இண்டஸ்இண்ட் பேங்க்
டிசிஎஸ்
எல் அண்ட் டி
டாடா மோட்டார்ஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஏசியன் பெயின்ட்ஸ்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
நெஸ்லே இந்தியா
பாரதி ஏர்டெல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.24 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

