Stock News: கலையும் போர் மேகம் - சென்செக்ஸ் 1,200+ புள்ளிகள் உயர்வு!
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதியானது. இதனால், மேற்காசிய போர் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது. இதன் தாக்கத்தால் இப்போது இந்திய பங்குச் சந்தையிலும் எழுச்சி நீடிக்கிறது.
ஈரான் போர் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து எழுச்சி கண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 1,112.70 புள்ளிகள் உயர்ந்து 76,648.74 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 335.55 புள்ளிகள் உயர்ந்து 23,956.40 ஆக இருந்தது.
“அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதியானது. இதனால், மேற்காசிய போர் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் வெகுவாக குறைந்தது. இதன் தாக்கத்தால் இப்போது இந்திய பங்குச் சந்தையிலும் எழுச்சி நீடிக்கிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் என்டிபிசி, சன் பார்மா ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டும் சரிவை சந்தித்தன. ஏனைய அனைத்து நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 1,236.27 புள்ளிகள் உயர்ந்து 76,764.22 ஆகவும், நிஃப்டி 370.15 புள்ளிகள் உயர்ந்து 23,993.05 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகப் போக்கு நிலவுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதியானது. இதனால், மேற்காசிய போர் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது. இதன் தாக்கத்தால் இப்போது இந்திய பங்குச் சந்தையிலும் எழுச்சி நீடிக்கிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
அதானி போர்ட்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
எஸ்பிஐ
ஏசியன் பெயின்ட்ஸ்
எல் அண்ட் டி
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐடிசி
எடர்னல்
டாடா மோட்டார்ஸ்
இன்போசிஸ்
ஐசிஐசிஐ பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
பாரதி ஏர்டெல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
டைடன் கம்பெனி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
மாருதி சுசுகி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
எம் அண்ட் எம்
டாடா ஸ்டீல்
நெஸ்லே இந்தியா
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டெக் மஹிந்திரா
இறங்கு முகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
சன் பார்மா
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.60 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

