Stock News: தொடரும் எழுச்சி - சென்செக்ஸ் 450+ புள்ளிகள் உயர்வு!
கச்சா எண்ணெய் விலை குறைவு, வெளிநாட்டு முதலீடிகளின் வரத்து உயர்வு உள்ளிட்ட காரணிகளால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவுகிறது.
கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்ட சாதகப் போக்கின் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 281.40 புள்ளிகள் உயர்ந்து 78,051.03 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 74.60 புள்ளிகள் உயர்ந்து 24,347.05 ஆக இருந்தது.
“கச்சா எண்ணெய் விலை குறைவு, வெளிநாட்டு முதலீடிகளின் வரத்து உயர்வு உள்ளிட்ட காரணிகளால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைடன் கம்பெனி, எல் அண்ட் டி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, இன்போசிஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 486.41 புள்ளிகள் உயர்ந்து 78,250.32 ஆகவும், நிஃப்டி 146.45 புள்ளிகள் உயர்ந்து 24,417.30 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகப் போக்கு நிலவுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவு, வெளிநாட்டு முதலீடிகளின் வரத்து உயர்வு உள்ளிட்ட காரணிகளால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
எல் அண்ட் டி
எஸ்பிஐ
எம் அண்ட் எம்
ஆக்சிஸ் பேங்க்
அதானி போர்ட்ஸ்
டாடா ஸ்டீல்
பாரதி ஏர்டெல்
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டாடா மோட்டார்ஸ்
மாருதி சுசுகி
இந்துஸ்தான் யூனிலீவர்
நெஸ்லே இந்தியா
இண்டஸ்இண்ட் பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
எடர்னல்
சன் பார்மா
என்டிபிசி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஐடிசி
இன்போசிஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பஜாஜ் ஃபின்சர்வ்
டெக் மஹிந்திரா
டிசிஎஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.40 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

