Stock News: மீண்டது பங்குச் சந்தை - சென்செக்ஸ் 500+ புள்ளிகள் உயர்வு!
மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடித்தாலும் கூட, பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி பல்வேறு தளர்வுகள் அடங்கிய கொள்கையை வெளியிட வாய்ப்புள்ளதால் இந்திய பங்குச் சந்தையும் சரிவில் இருந்து மீண்டுள்ளது.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் மீட்சிப் போக்கு நிலவுவது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை தந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 553 புள்ளிகள் உயர்ந்து 77,603.57 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 148.15 புள்ளிகள் உயர்ந்து 24,198.40 ஆக இருந்தது.
“மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடித்தாலும் கூட, பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி பல்வேறு தளர்வுகள் அடங்கிய கொள்கையை வெளியிட வாய்ப்புள்ளதால் இந்திய பங்குச் சந்தையும் சரிவில் இருந்து மீண்டுள்ளது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் நெஸ்லே இந்தியா, டெக் மஹிந்திரா, சன் பார்மா, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, என்டிபிசி, எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 517.95 புள்ளிகள் உயர்ந்து 77,572.88 ஆகவும், நிஃப்டி 150.10 புள்ளிகள் உயர்ந்து 24,202.15 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதகப் போக்கு நிலவுகிறது. மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடித்தாலும் கூட, பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி பல்வேறு தளர்வுகள் அடங்கிய கொள்கையை வெளியிட வாய்ப்புள்ளதால் இந்திய பங்குச் சந்தையும் சரிவில் இருந்து மீண்டுள்ளது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
நெஸ்லே இந்தியா
டெக் மஹிந்திரா
சன் பார்மா
அதானி போர்ட்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பாரதி ஏர்டெல்
எம் அண்ட் எம்
எஸ்பிஐ
டைடன் கம்பெனி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டாடா மோட்டார்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
டெக் மஹிந்திரா
எம் அண்ட் எம்
ஏசியன் பெயின்ட்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஐடிசி
நெஸ்லே இந்தியா
எடர்னல்
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
மாருதி சுசுகி
என்டிபிசி
எல் அண்ட் டி
டிசிஎஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இன்போசிஸ்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.18 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

