Stock News: மீண்டது பங்குச் சந்தை - சென்செக்ஸ் 500+ புள்ளிகள் உயர்வு!
சர்வதேச சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து உயர்வு உள்ளிட்ட காரணிகளால் ஏழு நாட்களுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டுள்ள இந்திய பங்குச் சந்தையில் பச்சை விளக்கு ஒளிரத் தொடங்கியிருக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 504.32 புள்ளிகள் உயர்ந்து 77,416.16 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 118.85 புள்ளிகள் உயர்ந்து 24,198.55. ஆக இருந்தது.
“சர்வதேச சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து உயர்வு உள்ளிட்ட காரணிகளால் ஏழு நாட்களுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது,” என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் மாருதி சுசுகி, டிசிஎஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், எடர்னல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. சன் பார்மா, நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 520.94 புள்ளிகள் உயர்ந்து 77,430.62 ஆகவும், நிஃப்டி 135.65 புள்ளிகள் உயர்ந்து 24,213.95 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் சாதகப் போக்கு நிலவுகிறது. சர்வதேச சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து உயர்வு உள்ளிட்ட காரணிகளால் ஏழு நாட்களுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
மாருதி சுசுகி
டிசிஎஸ்
டாடா ஸ்டீல்
ஐசிஐசிஐ பேங்க்
எடர்னல்
ஆக்சிஸ் பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
என்டிபிசி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பஜாஜ் ஃபின்சர்வ்
மாருதி சுசுகி
டிசிஎஸ்
டாடா ஸ்டீல்
ஐசிஐசிஐ பேங்க்
எடர்னல்
கோடக் மஹிந்திரா பேங்க்
டைடன் கம்பெனி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இன்போசிஸ்
எம் அண்ட் எம்
பாரதி ஏர்டெல்
அதானி போர்ட்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டாடா மோட்டார்ஸ்
டெக் மஹிந்திரா
இண்டஸ்இண்ட் பேங்க்
எஸ்பிஐ
இந்துஸ்தான் யூனிலீவர்
எல் அண்ட் டி
டைடன் கம்பெனி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
சன் பார்மா
நெஸ்லே இந்தியா
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐடிசி
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.61 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

