Stock News: ஆசிய எழுச்சி தாக்கம் - சென்செக்ஸ் 600+ புள்ளிகள் உயர்வு!
ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் ஆசிய பங்குச் சந்தைகளின் எழுச்சியின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் மீட்சிப் போக்கு நிலவுகிறது.
கடந்த 4 நாட்களுக்குப் பிறகு இன்று முற்பகலில் இந்திய பங்குச் சந்தை வெகுவாக மீண்டுள்ளது, முதலீட்டளர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 531.88 புள்ளிகள் உயர்ந்து 76,684.74 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 78.25 புள்ளிகள் உயர்ந்து 23,951.70 ஆக இருந்தது.
“ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் ஆசிய பங்குச் சந்தைகளின் எழுச்சியின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் மீட்சிப் போக்கு நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் நெஸ்லே இந்தியா, எடர்னல் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவை சந்தித்தன. ஏனைய அனைத்தும் நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டிருந்தன.
இன்று முற்பகல் 11.25 மணியளவில் சென்செக்ஸ் 669.04 புள்ளிகள் உயர்ந்து 76,821.90 ஆகவும், நிஃப்டி 111.05 புள்ளிகள் உயர்ந்து 23,984.50 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சற்றே ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் சாதகப் போக்கு நிலவுகிறது. ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் ஆசிய பங்குச் சந்தைகளின் எழுச்சியின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் மீட்சிப் போக்கு நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
எஸ்பிஐ
ஐசிஐசிஐ பேங்க்
என்டிபிசி
பாரதி ஏர்டெல்
எல் அண்ட் டி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
மாருதி சுசுகி
ஐடிசி
சன் பார்மா
இன்போசிஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டெக் மஹிந்திரா
எம் அண்ட் எம்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டிசிஎஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
டைடன் கம்பெனி
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
பாஜாஜ் ஃபின்சர்வ்
டாடா ஸ்டீல்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
நெஸ்லே இந்தியா
எடர்னல்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.48 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

