ராம்மோகன் நாயுடு, பிரியங் கார்கே, குணால் கபூர், விவேக் குப்தா - TechSparks 2025ல் அணிவகிக்கும் நட்சத்திர பேச்சாளர்கள்!
பெங்களூருவில் நடைபெறும் ‘டெக்ஸ்பார்க்ஸ் 2025’ தொழில்நுட்ப மாநாட்டில், கொள்கை வகுப்பாளர்கள், நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சங்கமிக்க உள்ளனர். நவம்பர் 6 முதல் 8ம் தேதி வரை நடைபெறும் யுவர்ஸ்டோரியின் முன்னணி நிகழ்ச்சி, நாட்டின் தொழில்முனைவு எதிர்காலம் தொடர்பான உரையாடலை முன்னெடுக்க உள்ளது.
நவம்பர் மாதம் பெங்களூருவில் நடைபெற இருக்கும் யுவர்ஸ்டோரியின் ஆண்டு மாநாடு ’டெக்ஸ்பார்க்ஸ்’ இதன் மைல்கல் பதிப்பாக இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு தாஜ் யெஷ்வவந்த்பூரில் நவம்பர் 6 முதல் 8 ம் தேதி வரை நடைபெறும் டெக்ஸ்பார்க்ஸ், அதன் 16வது ஆண்டில் இருப்பது, இந்தியாவின் அதிகரித்து வரும் தொழில்நுட்ப லட்சியம் மற்றும் அடுத்த பத்தாண்டுக்கான பயணத்தை இயக்கும் அதன் செயற்கை நுண்ணறிவு நுட்பம் சந்திக்கும் கட்டத்தில் நிகழ்கிறது.
இந்தியா 2030: ’பவர்ட் பை ஏஐ’ (India 2030: Powered by AI) எனும் இந்த ஆண்டின் கருப்பொருள் வெறும் கோஷம் மட்டும் அல்ல. 150 கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட தேசம், நுண்ணறிவு மற்றும் புதுமையாக்கத்தை கொண்டு வளர்ச்சியை வேகமாக்கி, நீடித்த தன்மையை உண்டாக்கி, வர்த்தக நிறுவனங்களை பெரிதாக்கி, சமூகத்தின் முக்கிய சவால்களை எதிர்கொள்ள உதவும் எனும் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது.
இந்த உதேவகத்தின் தொடர்ச்சியாக, மாநாட்டிற்கான தனித்தன்மை வாய்ந்த புதிய பேச்சாளர்கள் பட்டியலை யுவர்ஸ்டோரி அறிவிக்கிறது. ஒவ்வொரு பேச்சாளரும், கொள்கை, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவில் தனித்துவமான புள்ளி மற்றும் நிபுணத்துவத்தை கொண்டு வருகின்றனர். கூட்டாக இவர்கள், உரையாடலை உருவாக்கி, தொடர்புகளை ஏற்படுத்தி, அர்த்தமுள்ள தாக்கத்தை உண்டாக்கும் யுவர்ஸ்டோரியின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

டெக்ஸ்பார்க்ஸ் 2025 நுகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய பேச்சாளர்களில் சிலர் வருமாறு:
கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்:
பர்டியூ பல்கலையில் மின் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றவர், லாங் ஐலாண்ட் பல்கலையில் எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார். 2014ல் முதல் முறையாக 26 வயதில் எம்பி ஆனவர், 2019, 2024ல் மீண்டும் வெற்றி பெற்று, மத்திய அமைச்சராகி இருக்கிறார். அரசின் கொள்கை மற்றும் தொழில்நுட்பம் சந்திக்கும் புள்ளி பற்றி மற்றும் அரசின் செயல்பாடுகள் எப்படி புதுமையாக்கத்தை வளர்க்கும் என்பது பற்றி டெக்ஸ்பார்க்சில் பேச இருக்கிறார்.
பிரியங்க் கார்கே, தகவல் தொழில்நுட்ப அமைச்சர், கர்நாடக மாநிலம்
கர்நாடகா மாநிலம் இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமாக உருவாகியதில் முக்கிய பங்காற்றியவர், மாநிலம் தொடர்ந்து டிஜிட்டல் மாற்றத்தில் முன்னிலை வகிக்கும் நிலையில், இந்தியாவின் ஏஐ மற்றும் ஸ்டார்ட் அப் புரட்சியின் மையமாக கர்நாடகா மாநிலத்தை முன்னிறுத்தும் தனது தொலைநோக்கு பார்வையை பகிர்ந்து கொள்வார்.
குணால் கபூர், கெட்டோ இணை நிறுவனர்
சமூக தொடர் தொழில்முனைவோர் மற்றும் ஆரம்ப நிலை முதலீட்டாளர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய திரள் நிதி மேடையை துவக்கியவர், இந்த தொழில்நுட்ப மாநாட்டிற்கு மனித கண்ணாடியை கொண்டு வருகிறார். மக்கள் நலனுக்கான தொழில்நுட்பத்தை உண்டாக்கி வளர்த்தெடுப்பது பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
புனீத் சந்தோக், தலைவர், மைக்ரோசாப்ட் இந்தியா, தெற்காசியா
இந்தியா மற்றும் தெற்காசியாவில் டிஜிட்டல் மாற்றத்தை உண்டாக்கும் மைக்ரோசாப்டின் திட்டத்தை வழிநடத்துபவர், வர்த்தகம் மற்றும் சமூகத்தின் இழைகளில் ஏஐ மற்றும் கிளவுட் சேவையை ஒருங்கிணைப்பதில் ஈடுபாடு கொண்டுள்ளார். ஏஐ யுகத்தில் தொழில்நுட்பம், பரிவு மற்றும் நோக்கம் இணைந்து தனிமனிதர்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றி பேச இருக்கிறார்.
பிரிய நரசிம்மன், முதன்மை வர்த்தக அதிகாரி, இண்டஸ் ஆப்ஸ்டோர்
இண்டஸ் ஆப்ஸ்டோர் முதன்மை அதிகாரியாக, மாற்று இந்திய செயலி சந்தையை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருபவர், இந்தியா எப்படி புதுமையாக்கத்தின் மூலம் உலக செயலி பரப்பில் மாற்றத்தை கொண்டு வந்து, டிஜிட்டல் இறையாண்மையை மீட்கிறது என்பது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.
விசேஷ் ராஜாராம், நிர்வாக பாட்னர், ஸ்பெஷல் இன்வெஸ்ட்
ஆழ்நுட்பம் முதல் காலநிலை மாற்றம் வரையான நுட்பங்களில் இந்தியாவின் துணிச்சலான நிறுவனர்களை ஆதரித்து வருபவர், டெக்ஸ்பார்க்சில் உலக அளவில் போட்டி மிக்க ஆழ் நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்குவது பற்றி பேச இருக்கிறார்.
ரிஷி தாஸ், இண்டிகியூப், இணை நிறுவனர், சி.இ.ஓ
தொழில்முனைவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ளவர், இண்டிகியூப்பை நிறுவுவதற்கு முன், மனிதவள மேம்பாடு தீர்வுகளை உருவாக்கியிருக்கிறார். துடிப்பான தன்மையோடு நிறுவனங்களை வளர்த்தெடுப்பது, உறுதியான வர்த்தக சூழலை உருவாக்குவது தொடர்பாக பேச இருக்கிறார்.
விவேக் குப்தா, லிசியஸ் இணை நிறுவனர்
லிசியசை இந்தியாவின் நம்பகமான இறைச்சி மற்றும் கடல் உணவு பிராண்டாக மாற்றியவர், இந்திய உணவு சப்லை சைன் எதிர்காலத்தை ஏஐ மற்றும் தரவுகள் வடிவமைத்து வரும் விதம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
ஜொனாதன் ராஸ், கிராக் (Groq) நிறுவனர், சி.இ.ஓ.
ஏஐ சேவைகளுக்கான சிப் தயாரிப்பை ஜனநாயகமயமாக்குவதற்காக, கிராக் நிறுவனத்தை ஏற்படுத்தியவர். இதன் சிப்கள், மொழி மாதிரிகள் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புதிய நுண்ணறிவு புரட்சியில் கிராக் உள்கட்டமைப்பு முக்கிய பங்காற்றுவது பற்றியும் உலக தொழில்நுட்ப புரட்சியில் இந்தியாவின் முக்கிய இடம் பற்றியும் பேச இருக்கிறார்.
மதுசூதனன் ராவ், ஸ்விக்கி, சி.டி.ஓ
ஸ்விக்கியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக, அதன் புதுமையாக்கம், செயல்திறனை வழி நடத்தி வருகிறார். தொழில்நுட்பத்தை முதன்மையாக கொண்ட பிராண்ட்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இவரது உரை ஆர்வத்தை உண்டாக்கும்.
நோய் சிசிலியா ஓல்டனே, நிறுவன பங்குதாரர் விச்கரல் கேபிடல், ஸ்வீடன் இந்தியா வர்த்தக கவுன்சில் இந்திய பிரதிநிதி
நோக்கம் அடிப்படையிலான முதலீடு மற்றும் வளரும் சந்தைகளில் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருபவர், நிறுவனர்கள் இதயபூர்வமாக ஆதரித்து வருகிறார். வென்சர் மூலதனத்தின் எதிர்காலம், தீர்வு, நீடித்த தன்மை மற்றும் தாக்கம் சார்ந்து அமைய இருப்பது தொடர்பான பார்வையை பகிர்ந்து கொள்கிறார்.

விவேக் ராகவன், இணை நிறுவனர் சர்வம் ஏஐ
தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப வாதியாக விளங்குபவர்ம் டிஜிட்டல் பப்ளிக் குட்ஸ், மற்றும் சர்வம் ஏஐ நிறுவனங்களை நிறுவியவர். இந்தியாவில் இருந்து உலகிற்கான ஏஐ சேவைகளை உருவாக்குவது தொடர்பாக தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
ஸ்ரீநாத் ராமக்ருஷ்ணன், இணை நிறுவனர், சி.ஓ.ஓ. , ஜெட்வொர்க்
உலக சந்தை தேவைகளை, இந்திய தொழில் உற்பத்தி ஆற்றலுடன் இணைக்கும் நிறுவனத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். உலக அளவிலான செயல்பாடுகள் மற்றும் இந்தியாவின் உற்பத்தி மறுமலர்ச்சி பற்றி பேச இருக்கிறார்.
அகிஸ் இவாஞ்சிலிடிஸ், இணை நிறுவனர், இந்திய தலைவர், நத்திங்
நத்தின் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை வழிநடத்தி வருபவர், தொழில்நுட்ப பரப்பின் ஆழமான புரிதலை கொண்டுள்ளார். இந்தியா இனியும் தொழில்நுட்பத்திற்கான சந்தை மட்டும் அல்ல, அதன் சர்வதேச எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றல் கொண்டது என்பது பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்.
இஷ் பாபர், இணை நிறுவனர், சி.டி.ஓ. இன்சூரன்ஸ் தேக்கோ
இன்சூரன்ஸ் தேக்கோ தொழில்நுட்ப அதிகாரியாக, ஏஐ துணையோடு இந்தியர்களின் காப்பீடு அனுபவத்தை மாற்றி அமைத்து வருகிறார். இந்திய காப்பீடு பரப்பில் ஏஐ மற்றும் புதுமையாக்கம் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் தொடர்பாக பேச இருக்கிறார்.
பார்த் கிருஷ்ணமூர்த்தி, சி.டி.ஓ,யூபி
நிதி மற்றும் தொழில்நுட்பம் இணையும் பரப்பில் ஏற்பட்டு வரும் மாற்றம், புதுமையாக்கத்தில் முக்கிய பங்காற்றி வருபவர், அனைவரையும் உள்ளடக்கிய நிதி மற்றும் கடன் புதுமையாக்கத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றி எடுத்துரைக்கிறார்.
இவர்கள் மட்டும் அல்ல, இன்னும் பல முக்கிய பேச்சாளர்கள் வரவிருக்கும் டெக்ஸ்பார்க்ஸில் பங்கேற்க இருக்கின்றனர். ரோனி ஸ்குருவாலா (அப்கிரேடு நிறுவனர்), முகேஷ் பன்சால் (கியுர்பிட் இணை நிறுவனர்), வாணி கோலா (கலாரி கேபிடல், நிர்வாக இயக்குனர்), அபிராஜ் சிங் பால் (அர்பன் கம்பெனி இணை நிறுவனர், சி,இ.ஓ), கெய்வால்ய வோரா, (ஜெப்டோ இணை நிறுவனர்) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
முழு பேச்சாளர்கள் பட்டியலை இங்கே அணுகலாம்.
TechSparks பதிவு செய்ய!
Edited by Induja Raghunathan

