இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆன #RIPTiktok: கொண்டாடும் மக்கள்!
இந்தியாவில் மிகப் பிரபலமாக இருந்த டிக்டாக் ஆப் தடை செய்ததில் பலரின் பாராட்டைப் பெற்று, #RIPTikTok என்ற ஹாஷ்டாக் நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
இந்தியா முழுவதும் 59 சீன ஆப்’களை தடை செய்தது இந்திய அரசு. இந்த செய்தி வந்த நாள் முதல், மக்களிடையே இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக இந்தியாவில் மிகப் பிரபலமாக இருந்த டிக்டாக் ஆப் தடை செய்ததில் பலரின் பாராட்டைப் பெற்று, #RIPTikTok என்ற ஹாஷ்டாக் நாடு முழுவதும் தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ளது.
இந்தியாவின் தரவுகளை இந்தச் செயலிகள் மூலம் சீனா பெறுவதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்தே இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாகவும் ஊறுவிளைவிப்பதாகவும் இருக்கும் என்பதால் இந்தச் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆப்’களான TikTok, SHAREIt, UC Browser, Baidu Map உள்ளிட்ட 59 செயலிகளை இந்தியாவில் தடைசெய்துள்ளது இந்திய அரசாங்கம்.
இதைத்தொடர்ந்து டிவிட்டர் மற்றும் சமூக ஊடக பயனர்கள் டிக்டாக் தடைக்கு கொண்டாடும் வகையில் மீம்கள், வீடியோக்கள் மற்றும் ஜோக்குகளை பகிர்ந்து #RIPTikTok என்று டிக்டாக் ஆப்’ன் சமாதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
அதில் சில காமெடியான டிவிட்ட பதிவுகள்:
‘ஓம் சாந்தி டிக்டாக்’ - #RIPTikTok
டிக்டாக் சமாதி போட்டோவுடன் மோடி போட்டோ போட்டு #RIPTikTok
டிக்டாக் தடையை வரவேற்க வடிவேலு படத்துடன் மீம்ஸ் ட்ரெண்ட் ஆனது.
இப்படி #RIPTikTok போட்டு கலாய்த்தனர் பெரும்பாலான மக்கள். இதனிடையே டிக்டாக் மூலம் புகழடந்தை பலர் தங்கள் வருத்தத்தை தெரிவித்து கொண்டதோடு, இனி இனி இந்திய ஆப்’களான ‘Chingari,' ‘Roposo', 'Mitron' போன்றவற்றை பயன்படுத்தி தங்களின் திறமையை வெளிப்படுத்தப்போவதாகக் கூறினர்.