தமிழ்நாடு பட்ஜெட் 2026–27: கல்வி, வருவாய் மேம்பாடு, புதிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் - முழு விவரங்கள் இதோ!
தமிழக அரசின் 2026–27 நிதியாண்டுக்கான முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆகஸ்ட் 5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் கல்வி, மாணவர் நலன், வருவாய் மேம்பாடு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2026–27 நிதியாண்டுக்கான முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆகஸ்ட் 5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் கல்வி, மாணவர் நலன், வருவாய் மேம்பாடு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் முக்கிய நோக்கங்கள்:
* சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி.
* மாநிலத்தின் நிதிச் சவால்களை சமாளிக்க தீவிர நடவடிக்கைகள்.
* ’வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் நீண்டகால வளர்ச்சித் திட்டங்கள்.
* டெண்டர் முறைகேடுகளைத் தடுக்க வெளிப்படையான நடைமுறைகள்.
அரசின் முக்கிய சாதனைகள்
* சிங்கப்பெண் திட்டம்
* 200 யூனிட் இலவச மின்சாரம்
* 717 டாஸ்மாக் கடைகள் மூடல்
* வெளிப்படையான டெண்டர் முறை
* ஃபேஸ்லெஸ் வரி மதிப்பீடு மற்றும் பத்திரப்பதிவு
* சுரங்க நடவடிக்கைகள் முழுமையாக கணினிமயமாக்கல்

வருவாய் மேம்பாட்டு நடவடிக்கைகள்:
* மதுபான உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சிறப்புக் கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடிவருவாய்.
* பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட இலக்கு.
* முன்னாள் ஒன்றியத் திட்ட ஆணைய துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் வருவாய் மேம்பாட்டுக் குழு அமைப்பு.
பள்ளிக் கல்வி
மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.44,527 கோடி
சூப்பர் கிளீன் – சூப்பர் கேம்பஸ்
* முதற்கட்டமாக 10,000 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.
* ஒதுக்கீடு: ரூ.139 கோடி
முக்கிய அம்சங்கள்:
* தினசரி தூய்மைப் பணிகள்
* குடிநீர் மற்றும் கழிப்பறை பராமரிப்பு
* 24 மணி நேர பாதுகாப்பு
பள்ளி நிறைவுத் திட்டம்
* 3,734 அரசுப் பள்ளிகள் நவீனமயமாக்கப்படும்.
* மொத்த மதிப்பீடு: ரூ.2,132 கோடி
* நடப்பு ஆண்டுக்கான ஒதுக்கீடு: ரூ.300 கோடி
பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள்
* ஒதுக்கீடு: ரூ.125 கோடி
* நவீன உண்டு-உறைவிடப் பள்ளிகள் அமைப்பு.
* 9–12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு:
* இலவச கல்வி
* சீருடை
* உணவு
* தங்குமிடம்
* பாடப்புத்தகங்கள்
பாடத்திட்ட மறுசீரமைப்பு
* ஒதுக்கீடு: ரூ.25 கோடி
* கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கம்.
'போதையில்லா தமிழ்நாடு' திட்டம்
* ஒதுக்கீடு: ரூ.7 கோடி
பள்ளிகளில்:
* போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்கள்
* தன்னார்வக் குழுக்கள்
* புகார் தெரிவிக்க 'போதையில்லா தமிழ்நாடு' செயலி
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள்
* ஒதுக்கீடு: ரூ.277 கோடி
* பயனாளிகள்: 5.32 லட்சம் மாணவர்கள்
* வசதிகள்: ஹெல்மெட்; குடிநீர் பாட்டில் வைத்திருக்கும் வசதி
பொது நூலகங்கள்
* டிஜிட்டல் நூலகங்களாக மேம்படுத்த
* ஒதுக்கீடு: ரூ.10 கோடி
நீட் தேர்வு
* நீட் தேர்வை ரத்து செய்தல்,
* 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைவழங்க ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்.
உயர்கல்வி
மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.8,393 கோடி
வெற்றி மடிக்கணினி திட்டம்
* ஒதுக்கீடு: ரூ.2,000 கோடி
* கல்லூரி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டுக்காக.
TN–SUDAR திட்டம்
* மொத்த மதிப்பீடு: ரூ.3,200 கோடி
* 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள்
* 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள்
* அரசு–தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் செயல்படுத்தப்படும்.
அரசு கட்டுமான மானியம்: ரூ.640 கோடி (20%)
வசதிகள்:
* குளிரூட்டப்பட்ட டிஜிட்டல் கற்றல் மையங்கள்
* 24 மணி நேர பாதுகாப்பு
* நவீன சமையலறைகள்
* தானியங்கி விடுதி ஒதுக்கீடு
மாணவர் விடுதி மேம்பாடு:
* சிறப்பு நோக்கு நிறுவனம் அமைக்க
* ஒதுக்கீடு: ரூ.10 கோடி
தமிழ்நாடு – சுடர் (TNSHIC)
ஆரம்ப மூலதனம்: ரூ.10 கோடி
* மாணவர் விடுதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான சிறப்பு நிறுவனம்.
போட்டித் தேர்வு பயிற்சி
* கூடுதல் ஒதுக்கீடு: ரூ.3 கோடி
புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ITI)
* 5 புதிய ஐடிஐக்கள்
* மொத்த மதிப்பீடு: ரூ.90 கோடி
சிறப்பு அரசு சட்டக் கல்லூரி
* மதுரையில் தொடங்கப்படும்.
* 300 மாணவர்கள் சேர்க்கை.
* தேசிய தரத்திலான சட்டக் கல்வி வழங்கும் நோக்கம்.
நிர்வாக சீர்திருத்தங்கள்
* அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிலையிலேயே அனுமதி. அதிகாரப் பகிர்ந்தளிப்பு மூலம் விரைவான சேவை
ஊழல் ஒழிப்பு
பசுமை மற்றும் தொழில்நுட்ப முயற்சிகள்
மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலன் பராமரிப்பு முயற்சி**
ஒதுக்கீடு: ரூ.3 கோடி
முக்கிய நிதி ஒதுக்கீடுகள் – சுருக்கமாக
* பள்ளிக் கல்வி– ரூ.44,527 கோடி
* உயர்கல்வி – ரூ.8,393 கோடி
* வெற்றி மடிக்கணினி திட்டம் – ரூ.2,000 கோடி
* TN–SUDAR மாணவர் விடுதிகள்– ரூ.3,200 கோடி
* சூப்பர் கிளீன்–சூப்பர் கேம்பஸ்– ரூ.139 கோடி
* பள்ளி நவீனமயமாக்கல்– ரூ.300 கோடி (நடப்பு ஆண்டு)
* காமராஜர் சிறப்புப் பள்ளிகள் – ரூ.125 கோடி
* பாடத்திட்ட மறுசீரமைப்பு– ரூ.25 கோடி
* போதையில்லா தமிழ்நாடு– ரூ.7 கோடி
* 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள்– ரூ.277 கோடி
* டிஜிட்டல் நூலகங்கள்– ரூ.10 கோடி
* புதிய ஐடிஐக்கள் – ரூ.90 கோடி
* போட்டித் தேர்வு பயிற்சி– ரூ.3 கோடி
* மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலன் பராமரிப்பு– ரூ.3 கோடி

