Zoho டெவலப்பர்களுக்காக அறிமுகம் செய்த ஏஐ ஏஜெண்ட் மேடை Catalyst 3.0
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ, ஏஐ சார்ந்த டெவலப்பர் அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய, கேடலிஸ்ட் 3.0 எனும் அனைத்து புதிய திறன்கள் கொண்ட, ஏஜெண்ட் உருவாக்கத்திற்கு ஏற்ற முழு ஸ்டேக் கிளவுட் டெவலப்மெண்ட் மேடையை அறிமுகம் செய்துள்ளது.
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ, ஏஐ சார்ந்த டெவலப்பர் அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய, 'கேடலிஸ்ட் 3.0' (Catalyst 3.0) எனும் அனைத்து புதிய திறன்கள் கொண்ட, ஏஜெண்ட் உருவாக்கத்திற்கு ஏற்ற முழு ஸ்டேக் கிளவுட் டெவலப்மெண்ட் மேடையை அறிமுகம் செய்துள்ளது.
கேடலிஸ்ட் 3.0 (Catalyst 3.0) ஏஐ சார்ந்த ஒருங்கிணைந்த டெவலப்மெண்ட் சூழல், ஏஜெண்ட் திறன், எம்சிபி ஆதரவு, ஏஐ சார்ந்த செயல்முறை உள்ளிட்டவற்றை ஒரே மேடையில் கொண்டு வந்து பிராம்ட் முதல் உற்பத்தி செயல்முறையை வேகமாக்குகிறது. அணுகல் வசதியை மேம்படுத்த மற்றும், எதிர்கால டெவல்பர்களுக்கு உதவும் வகையில் மாணவர்களுக்கான இலவச திட்டமும் கொண்டுள்ளதாக நிறுவனம் இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
72 சதவீத டெவலப்பர்கள் தினசரி பணிகளில் கோட் எழுத ஏஐ சேவைகளை நாடுகின்றனர் என்றாலும், கோடிங் என்பது ஒரு பகுதி மட்டுமே. ஒருங்கிணைப்பிற்காக பல்வேறு மேடைகளில் மற்றும் கிளவுட் மேடை செயல்பாடுகள் தேவை. இதில் உள்ள சிக்கல்களை போக்கும் வகையில் கேடலிஸ்ட் 3.0 அமைந்துள்ளது. மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
"ஏஜெண்டிக் ஏஐ கோடிங் உதவியாளர்கள் செயலிகள் உருவாக்கப்படும் வேகத்தை அதிகரித்துள்ளன என்றாலும், உருவாக்கப்படும் கோட் செயல்படுத்தப்படுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செயலிக்கும் கிளவுட் சேவைகளை ஒருங்கிணைக்க , உள்கட்டமைப்பு சேவை நிர்வாகத்திற்கு அதிக நேரம் தேவைபப்டுகிறது. இந்த உராய்வை நீக்கும் வகையில் கேடலிஸ்ட் 3.0 உருவாகியுள்ளது,” என ஜோஹோ வருவாய் வளர்ச்சிப் பிரிவு உலக துணைத்தலைவர் ஆனந்த் நெற்குனம் கூறியுள்ளார்.
போட்டி நிறுவனங்கள் போல பயன்பாடு தவிர சந்தா கட்டணம் வசூலிக்காமல், பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டண மாதிரியை கொண்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"மேலும், மாணவர்களுக்கான இலவச திட்டமும் அறிமுகம் செய்யப்படுகிறது. கேடலிஸ்ட் 3.0 மாணவர் டெவலப்பர்களுக்கு அளிப்பதன் மூலம் வழக்கமான உருவாக்க சுழற்சியில் இருந்து விடுவித்து சுதந்திரம் அளிக்கிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏஐ கோடிங் உதவியாளர் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான பல அம்சங்களை இந்த மேடை கொண்டுள்ளது. எளிதான பயன்பாட்டிற்காக ஏஜெண்டிக் ஏஐ திறன்கள் கொண்டுள்ளது. மேலும், எம்சிபி ஆதரவும் கொண்டுள்ளது. ஏஐ சார்ந்த உருவாக்கத்தை இவை சீராக்குவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த மேடை கொண்டு உருவாக்கப்படும் செயலிகள் ஜோஹோவின் கிளவுட் மேடை பாதுகாப்பை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோஹோ செயலிகளுடனான ஆழமான ஒருங்கிணைப்பு வசதியையும் பெற்றுள்ளது.
Edited by Induja Raghunathan

