கும்பகோணத்தில் இருந்து மேட் இன் இந்தியா ERP தளம் அறிமுகம்: உலக நிறுவனங்களுடன் போட்டியில் Zoho
இது முழுக்க முழுக்க இந்தியாவில், குறிப்பாக கும்பகோணம் போன்ற கிராமப்புற பகுதிகளில் உள்ள திறமையாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு Made-in-India ERP தயாரிப்பு ஆகும்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Zoho, இந்திய நிறுவனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'ஜோஹோ ஈஆர்பி' (Zoho ERP) மென்பொருளை தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது முழுக்க முழுக்க இந்தியாவில், குறிப்பாக கும்பகோணம் போன்ற கிராமப்புற பகுதிகளில் உள்ள திறமையாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு ஆகும்.
ஏற்கனவே சந்தையில் இருக்கும் சிக்கலான மற்றும் அதிக செலவு பிடிக்கும் வெளிநாட்டு ERP மென்பொருட்களுக்கு மாற்றாக, எளிமையான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மற்ற மென்பொருட்களைப் போல ஏஐ-ஐ ஒரு மேலோட்டமான அடுக்காகச் சேர்க்காமல், ஜோஹோ இதில் ஆரம்பத்திலிருந்தே Zia எனும் தனது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஆழமாகப் பதித்துள்ளது.

நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மாற்றங்களை மிக எளிதாகச் செய்துகொள்ளலாம். ஒருங்கிணைந்த மேலாண்மை நிதி, விநியோகச் சங்கிலி, உற்பத்தி, சில்லறை விற்பனை மற்றும் ஊதிய மேலாண்மை (Payroll) அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய சட்ட திட்டங்கள், GST, இ-இன்வாய்சிங் மற்றும் இந்திய பிஎஃப் (EPF), இஎஸ்ஐ (ESI) போன்ற சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்முறை தீர்வுகள், உற்பத்தி (Manufacturing), விநியோகம், சில்லறை விற்பனை மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு (NGO) எனத் தனித்தனி வசதிகள் உள்ளன.
ஜோஹோ தனது வெற்றிகரமான 'தென்காசி மாடலை' இப்போது கும்பகோணத்திலும் செயல்படுத்தி வருகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மற்றும் இணை நிறுவனர் ஷைலேஷ் தேவி ஆகியோர் கூறுகையில்,
"கும்பகோணத்தில் உள்ள உள்ளூர் திறமையாளர்களைக் கொண்டு இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்கள் நகரங்களுக்கு இடம் பெயர்வதும் (Talent Drain) தடுக்கப்படுகிறது," என்றனர்.

Zoho CEO ஷைலேஷ் தாவே
2026-ஆம் ஆண்டிற்குள் கும்பகோணத்தில் சுமார் 2,000 பேர் பணிபுரியும் வகையில் ஒரு பெரிய அலுவலக வளாகத்தை அமைக்க ஜோஹோ திட்டமிட்டுள்ளது.
ஜோஹோ ஸ்கூல் ஆஃப் லேர்னிங் (ZSL) மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி, இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் உள்ளூர் குளங்களைத் தூர்வாருதல் போன்ற சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

