78% நிறுவனங்கள் ஏஐ திறன் கொண்ட பேமெண்ட் கேட்வே வசதிக்கு மாறிவிடுவார்கள் - Zoho ஆய்வில் தகவல்!
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ தனது இந்தியன் மெர்சண்ட் பேமெண்ட் சர்வே 2026 முடிவுகளை வெளியிட்டுள்ளது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ தனது இந்தியன் மெர்சண்ட் பேமெண்ட் சர்வே 2026 முடிவுகளை வெளியிட்டுள்ளது. தாங்கள் எதிர்பார்க்கும் ஏஐ திறன்களை வேறு ஒரு பேமெண்ட் நிறுவனம் வழங்கினால், 78 சதவீத இந்திய வர்த்தகங்கள் முதன்மை பேமெண்ட் நிறுவனத்தை மாற்றத் தயாராக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துவங்கி பெரிய நிறுவனங்கள் வரை, என 700க்கும் மேலான நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு பேமெண்ட் உள்கட்டமைப்பு தொடர்பாக மாறி வரும் எதிர்பார்ப்புகளை சுட்டிக்காட்டுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோசடி கண்டறிதல், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, பேமெண்ட் தோல்வி தவிர்ப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த வர்த்தகங்கள் ஏஐ திறன்களை நாடுகின்றன. இந்த சவால்கள், பேமெண்ட்களை கடந்து, பரந்த நிதி செயல்முறையிலும் தொடர்பு கொண்டிருப்பதால் வர்த்தகங்கள், தங்கள் தணிக்கை மற்றும் ஈஆர்பி செயல்முறையுடன் ஆழமாக ஒருங்கிணந்த பேமெண்ட் செயல்முறையை எதிர்பார்க்கின்றன.
"டிஜிட்டல் பேமெண்ட் வேலை செய்கிறதா? என கேட்ட நிலை மாறி, டிஜிட்டல் பேமெண்ட் உள்கட்டமைப்பு வேகமானதா, நம்பகமானதா, அறிவார்ந்த திறன் கொண்டதா? என இந்திய வர்த்தகங்கள் கேட்கத் துவங்கியுள்ளன. மேலும், வர்த்தகங்கள் தங்கள் பேமெண்ட் ஸ்டேக் நிதி மற்றும் ஈஆர்பி அமைப்புகளுடன் ஆழமாக தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன,” என ஜோஹோ பேமெண்ட் டெக்னாலஜிஸ் சி.இ.ஓ மற்றும் ஜோஹோ பியூ நிதி, செயல்பாடுகள் உலக தலைவர் சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதற்கேற்ற வகையில் ஜோஹோ பேமெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், ஜோஹோ பைனான்ஸ் மற்றும் ஜோஹோ ஈஆர்பி உள்ளிட்டவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஏஐ சார்ந்த மோசடி மற்றும் வழக்கத்திற்கு மாறான செயல்முறை கண்டறிதல் போன்ற திறன் பெற்றிருக்கிறது, என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏஐ திறன்
60 சதவீத வர்த்தகங்கள் ஏஐ திறனை தங்கள் பேமெண்ட் செயல்முறையில் பயன்படுத்துகின்றன. மேலும், 20 சதவீத நிறுவனங்கள் இவற்றை தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. மோசடி கண்டறிதல், ஸ்மார்ட் பேமெட்ன்ட் ரூட்டிங், தானியங்கி பிரச்சனை திர்வு உள்ளிட்ட ஏஐ திறன்களை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
ஒருங்கிணைப்பு
65 சதவீத நிறுவனங்கள், தணிக்கை மற்றும் ஈஆர்பி அமைப்புகளுடன் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதே தற்போதுள்ள பேமெண்ட் சேவையை தொடரக் காரணம், என தெரிவித்துள்ளன. ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை ஆண்டு வருவாய் கொண்ட நிறுவனங்கள் மற்றும் ரூ.250 கோடிக்கு மேல் வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம். இதுவே தற்போதைய பேமெண்ட் சேவையை தொடரவும் காரணமாகிறது.
மாறாக, ஒரே நாளில் செடில்மண்ட் செய்யும் வசதியை, வேறு ஒரு பேமெண்ட் நிறுவனத்திற்கு மாறுவதற்கான முக்கியக் காரணமாக அமைகிறது. ஒருங்கிணைப்பு மற்றும், வேகம், செடில்மண்ட் உள்ளிட்ட அம்சங்களை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. 83 சதவீத நிறுவனங்கள் உத்தரவாதமான ஒரே நாள் செடில்மண்டிற்காக கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்கின்றன.
பேமெண்ட் தோல்வி
பெமெண்ட் செயல்பாடுகளை பொறுத்தவரை ரீபண்ட் தாமதம், பேமெண்ட் தோல்வி மற்றும் மெதுவான செடில்மண்ட் ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன. 56 சதவீத நிறுவனங்கள் மேமெண்ட் தோல்வியை முக்கிய பிரச்சனையாக கருதுகின்றன.
46 சதவீத நிறுவனங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை முக்கியமாக கருதுகின்றன. பல நிறுவனங்கள் இதில் அதிக நேரம் செலவிடுகின்றன. 14 சதவீத நிகழ்வுகள் மட்டும் ஒரு மணி நேரத்திற்குள் தீர்க்கப்படுகின்றன.
மோசடி தாக்கம்
மோசடியை எதிர்கொண்டுள்ள நிறுவனங்களில், யுபிஐ சமூக பொறியியல் மோசடியே பரவலானதாக உள்ளது. துறைகளுக்கு ஏற்ப மோசடி முறைகள் மாறுகின்றன.
ஜோஹோ பேமெண்ட்
இந்திய வணிக பேமெண்ட் துறை எந்த திசை நோக்கி செல்கிறது என்பதை இந்த ஆய்வு தெளிவாக உணர்த்துகிறது. வேகமான, அறிவார்ந்த, மற்றும் வர்த்தக நிதி செயல்முறையுடன் ஒருங்கிணைந்த பேமெண்ட் உள்கட்டமைப்பு வர்த்தகங்கள் எதிர்பார்க்கின்றன. ஜோஹோ பேமெண்ட் இந்த அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan

